எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 18 அக்டோபர், 2010

CHETTINAD MUTTON KUZAMBU.. செட்டிநாட்டு மட்டன் குழம்பு..

CHETTINAD MUTTON KUZAMBU..:-
NEEDED :-
MUTTON - 1/4 KG ( FOR 2 PPL)
SMALL ONION - 15 NOS.
GARLICS - 10 PODS.
TOMATO - 1 NO.
TAMARIND - 3 PODS
SALT - 1 1/2 TSP

TO GRIND :-
RED CHILLIES - 10 NOS.
CORRIANDER SEEDS - 1 TBLSPN.
SOMPH - 2 TSP
JEERA - 1 TSP
BLACK PEPPER - 10 NOS.
POPPY SEEDS ( KHAS KHAS) - 1 TSP.
SMALL ONION - 2 NOS
GARLIC - 1 POD

TO FRY :-
SOMPH - 1/4 TSP
CLOVE - 2 NOS
CHINNAMON - 1 INCH PIECE
BAY LEAF - 1/8 TH
KALPASIP POO - 1
CURRY LEAVES - 1 ARK
OIL - 1/2 TBLSPN.

METHOD :-
CLEAN AND COOK THE MUTTON IN A PRESSURE COOKER WITH LITTLE WATER .
PEEL AND HALVE ONIONS AND GARLICS AND TOMATO.
SOAK TAMARIND WITH SALT IN A CUP OF WATER AND TAKE THE PULP.
FRY RED CHILLIES., CORRIANDER SEEDS., SOMPH., JEERA., PEPPER., POOPY SEEDS IN A TAWA WITH 1/2 TSP OIL. GRIND THIS WITH 2 ONION AND 1 GARLIC.
HEAT OIL IN A TAWA ADD SOMPH., CLOVES., CINNAMON., BAY LEAVES., KALPASIP POO., CURRY LEAVES. THEN ADD ONIONS AND GARLICS., TOMATO . SAUTE FOR SOME TIME . ADD THE GROUND MASALA AND SAUTE TILL OIL SEPERATES AT THE SIDES . THEN AND TAMARIND PULP. ADD MUTTON WITH COOKED WATER . BRING TO BOIL. SIMMER FOR 20 MIN AND COOK TILL MUTTON IS TENDER . SERVE IT WITH PLAIN RICE., OR CHAPPATIS.. OR DOSAI AND IDDLIES.

THIS IS CHETTINAD SPECIAL MUTTON KUZAMBU WITHOUT COCONUT AND SPICY.


செட்டிநாடு மட்டன் குழம்பு :-
தேவையானவை :-
மட்டன் - 1/4 கிலோ ( 2 பேருக்கு)
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10
தக்காளி - 1
புளி - 3 சுளை
உப்பு - 1 1/2 டீஸ்பூன்.

அரைக்க :-
வரமிளகாய் - 10
தனியா ( கொத்துமல்லி விதை) - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 10
கசகசா - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 1 பல்

தாளிக்க :-
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1 இஞ்ச் துண்டு.,
இலை - 1/8 பீஸ்
கல்பாசிப்பூ - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை :-
மட்டனை சுத்தம் செய்து பிரஷர் குக்கரில் சிறிதளவு தண்ணிரில் நன்கு வேக வைக்கவும் . வெங்காயம் பூண்டை தோலுரித்து., இரண்டாக அரிந்து கொள்ளவும். தக்காளியைத்துண்டுகள் செய்யவும். புளியையும் உப்பையும் 1 டம்ளர் தண்ணீரில் ஊறப் போடவும். வாணலியில் அரை ஸ்பூன் எண்ணையில் மிளகாய்., மல்லி., சோம்பு., சீரகம்., மிளகு., கசகசாவை
வறுக்கவும். இத்துடன் வெங்காயம் ., பூண்டு சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு., பட்டை., கிராம்பு., இலை., கல்பாசிப்பூ., கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் ., பூண்டு., தக்காளி போட்டு வதக்கி., அரைத்த மசாலாவை சேர்க்கவும். பக்கங்களில் எண்ணைய் பிரியும் வரை வதக்கி., புளித்தண்ணீரையும் வேகவைத்த மட்டனையும் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் சிம்மில் 20 நிமிடம் வேகவைத்து மட்டன் வெந்ததும் இறக்கவும். இது சாதம்., சப்பாத்தி., தோசை., இட்லியுடன் சாப்பிட ஏற்றது.

இது செட்டிநாடு ஸ்பெஷல் ஐட்டம்.. இது தேங்காய் இல்லாமல்., அம்மியில் அரைத்து செய்யப்படுவது.

6 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. உங்களுடைய இந்த ரெசிபி செய்து பார்த்தேன் அக்கா..செம சூப்பர்!! புளி சேர்த்து செய்வது நல்லாயிருந்தது.விரைவில் போஸ்ட் செய்கிறேன்.அருமையான குறிப்புக்கு நன்றி அக்கா!!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...