எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 15 ஜூலை, 2021

8.பீட்ரூட் பிரியாணி

8.பீட்ரூட் பிரியாணி


தேவையானவை:- பீட்ரூட் பெரிது 1, பொன்னி புழுங்கல் அரிசி – 1 கப், பாசிப்பருப்பு – கால் கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி பூண்டு விழுது- 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், மல்லித்தூள் – அரை டீஸ்பூன் தலா, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, கொத்துமல்லித்தழை – 2 டீஸ்பூன், பட்டை கிராம்பு, ஏலக்காய் – தலா 2. கல்பாசிப்பூ, பிரிஞ்சி இலை – தலா 1,எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- பீட்ரூட்டைத் தோல்சீவித் திருகி வைக்கவும். பொன்னி புழுங்கல் அரிசியைக் களைந்து நீரை வடித்து வைக்கவும். பாசிப்பருப்பைக் கழுவி கால் கப் நீரில் ஊறவைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு, ஏலக்காய், கல்பாசிப்பூ, பிரிஞ்சி இலை போட்டுத் தாளிக்கவும். இதில் பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். எண்ணெய் பிரியும்போது இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அதிலேயே மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மல்லித்தூள், திருகிய பீட்ரூட், தக்காளி கொத்துமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி பாசிப்பருப்பை நீருடன் சேர்த்து நன்கு கலக்கி மூடி போட்டு வேகவிடவும். ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வெந்ததும் புழுங்கல் அரிசியைச் சேர்த்து உப்புப் போட்டு இரண்டு கப் நீரூற்றி நன்கு கலக்கி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும். ஆறியதும் இறக்கி சில்லி சிக்கன், மயோனிஸுடன் பரிமாறவும். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...