2.அரியரிசி
தேவையானவை:- பச்சரிசி – 1 கப், தூள் வெல்லம் – 100 கி
செய்முறை:- பச்சரிசியைக் களைந்து ஊறவைக்கவும். நன்கு ஊறியபின் அரிசியைக் கல் இல்லாமல் அரித்து எடுத்துத் தூள் வெல்லம் கலந்து நிவேதிக்கவும்.
3.துள்ளுமா
தேவையானவை:- பச்சரிசி – 1 கப், அச்சு வெல்லம் – 100 கி,
செய்முறை:- பச்சரிசியைக் களைந்து ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசியை நீரில்லாமல் வடித்து எடுத்துப் பெரபெரவென உரலில் இடித்தோ மிக்ஸியில் அரைத்தோ வைக்கவும். இதில் அச்சுவெல்லத்தைத் தூள் செய்து ஒரு சுற்றுச் சுற்றி நிவேதிக்கவும். (உரலில் போட்டு இடிக்கும்போது குருணையுடன் துள்ளி விழும் என்பதால் இதன் பெயர் துள்ளுமா.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக