சைவ மீன் குழம்பு
தேவையானவை :- கடலை மாவு - அரை கப், வாழைக்காய் -1, எண்ணெய் – 20 மிலி, பெரிய தக்காளி - 1, சின்ன வெங்காயம் - 15, வெள்ளைப்பூண்டு - 10, இளம் கருவேப்பிலை கொத்துமல்லி - சிறிது. புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து,வெந்தயம், தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு, கருவேப்பிலை - 1 இணுக்கு. அரைக்க :- வரமிளகாய் - 4, சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம், மிளகு - கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன். தேங்காய் - கால் மூடி , சின்ன வெங்காயம் - 2, பூண்டு - 1 பல்.
செய்முறை :- வாழைக்காயின் தோல்பகுதியைக் குச்சிகுச்சியாக நீளமாகச் சீவவும். கடலை மாவில் கால் டீஸ்பூன் உப்பு, மிளகாய்ப்பொடி சேர்த்துத் தோசை மாவுப் பக்குவத்தில் கரைக்கவும். தோசைக்கல்லில் கடலைமாவைத் தோசையாக ஊற்றி நடுவில் இரண்டு வாழைக்காய்க் குச்சிகளை இரண்டு இஞ்ச் இடைவெளியில் போட்டு மூன்றாகவோ நான்காகவோ மடித்து மடித்து எடுக்கவும். அதை மீன் சைஸில் துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்து வைக்கவும். சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, தக்காளியைச் சுத்தம் செய்து துண்டாக நறுக்கி வைக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள் , மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து வெந்தயம் தாளித்து சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டு, தக்காளி , கருவேப்பிலை போட்டு வதக்கவும். இதில் கரைத்துவைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். இரண்டு கொதி வந்ததும் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும். நன்கு கொதிவரத் துவங்கியதும் வெட்டி வறுத்து வைத்த மீன் துண்டுகளைக் குழம்பில் சேர்க்கவும். ரொம்பவும் கிளறாமல் குழம்பை இறக்கிப் பரிமாறவும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக