எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 பிப்ரவரி, 2024

13.பழம்பொரி

13.பழம்பொரி


 

தேவையானவை:- நேந்திரன் வாழைப்பழம் – 2 , மைதா – அரை கப், பச்சரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், ஜீனி – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, பேக்கிங் சோடா – 1 சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.  

 

செய்முறை:- நேந்திரன் வாழைப்பழத்தைத் தோல் சீவி ஸ்லைஸுகளாக்கவும். மைதா, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, ஜீனி சேர்த்துப் பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து நேந்திரன் ஸ்லைசுகளை மாவில் தோய்த்துப் பொரித்தெடுக்கவும்.

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

12.கேரட் ஸ்டஃப்ட் குல்ச்சா

12.கேரட் ஸ்டஃப்ட் குல்ச்சா


 

தேவையானவை:- கேரட் – கால் கிலோ, மைதா – 2 கப், ஜீனி – கால் கப், உப்பு – அரை டீஸ்பூன், ஈஸ்ட் – சிறிது. நெய் – 2 டேபிள் ஸ்பூன்.

 

செய்முறை:- கேரட்டைத் தோல்சீவித் துருவி ஒரு பானில் போட்டு நன்கு வதக்கிப் பச்சை வாடை போனதும் ஜீனி சேர்த்து வேகவைத்துப் பூரணம் போல் கிளறி எடுக்கவும். சிறிது வெதுவெதுப்பான நீரில் ஈஸ்டை ஊறவைத்து மைதா மாவு உப்புக் கலவையில் ஊற்றி மென்மையாகப் பிசைந்து ஒருமணிநேரம் ஊறவைக்கவும். மூடி போட்டு வெய்யிலிலும் வைக்கலாம். இதில் எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து கேரட் பூரணத்தை வைத்து மூடி கனமான சப்பாத்திகளாகத் திரட்டி நெய் போட்டுச் சுட்டு எடுக்கவும்.

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

11.பீட்ரூட் ரவா கேக்

11.பீட்ரூட் ரவா கேக்


 

தேவையானவை:- பீட்ரூட் – சின்னம் 1, வெள்ளை ரவை - ஒரு கப், ஜீனிப் பவுடர் – 1 கப், பால் – 1கப், தயிர் – அரை கப், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன், நெய் – 3 டேபிள் ஸ்பூன்.

 

செய்முறை:- பீட்ரூட்டைத் தோல்சீவி தூளாகத் திருகி வெறும் வாணலியில் பச்சை வாசம் போக வதக்கி ஆறவிடவும். தயிரை நன்கு அடித்துக் கொள்ளவும். இதில் பீட்ரூட், ஜீனிப் பவுடர், ரவை, பால், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவைச் சேர்க்கவும். நன்கு கலக்கி சிறிது நேரம் வைக்கவும். குக்கரில் கீழே ஒரு ஸ்டாண்ட் வைத்து ஐந்து நிமிடம் சூடாக்கவும். ஒரு பேக்கிங் ட்ரேயில் நெய் தடவி ரவை பீட்ரூட் கலவையை ஊற்றி குக்கரில் வைத்து கேஸ்கட், வெயிட் போடாமல் முக்கால் மணி நேரம் மீடியம் நெருப்பில் வேகவைத்து எடுக்கவும். Read more: http://www.mylivesignature.com/mls_wizard2_1.php?sid=54488-89-72B745B7DCD91A6D51CF5145CF29EE5F#ixzz0gZnBC9oU

வியாழன், 22 பிப்ரவரி, 2024

10.பூசணி பேடா/ஆக்ரா பேடா/அங்கூரி பேடா

10.பூசணி பேடா/ஆக்ரா பேடா/அங்கூரி பேடா


 

தேவையானவை:- பூசணி – 2 கீற்று, சுண்ணாம்பு – ½ டீஸ்பூன், ஜீனி – 1 1/2 கப், ஏலக்காய் – 3, தாழம்பூ எசன்ஸ் – சில துளிகள், குங்குமப்பூ – 1சிட்டிகை, கேசரி கலர் – ஒரு சிட்டிகை.

 

செய்முறை:- பூசணியைத் தோல்சீவி ஒரு இஞ்ச் சதுரத் துண்டுகளாக்கவும். 3 கப் தண்ணீரில் சுண்ணாம்பைக் கரைத்து அதில் பூசணித்துண்டுகளை 24 மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பின் நன்கு அலசிக் கழுவி எடுத்து நீரில் 1 நிமிடம் வேகவைத்து வடித்து வைக்கவும். ஜீனியுடன் ஏலக்காய்த்தூள்,குங்குமப்பூர், கேசரி கலர் சேர்த்து கால் கப் நீரூற்றி அடுப்பில் வைக்கவும். ஜீனி கரைந்ததும் பூசணித்துண்டுகளைச் சேர்த்து நீர் வற்றியதும் இறக்கி தாழம்பூ எசன்ஸை ஸ்பிரே செய்து ஆறவிடவும்.

திங்கள், 19 பிப்ரவரி, 2024

9.பரங்கிக்காய் அல்வா

 9.பரங்கிக்காய் அல்வா


 

தேவையானவை:- பரங்கிக்காய் – 2 கீற்று, ஜீனி – 1 கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், கெட்டிப் பால் – 1 கப், முந்திரி, கிஸ்மிஸ் – தலா 8, ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.

 

செய்முறை:- பரங்கிக்காயைத் தோல்சீவி மென்மையாகத் துருவவும். பாதி நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்து எடுத்து வைத்துவிட்டு மீதி நெய்யில் பரங்கிக்காய் துருவலைப் போட்டுப் பச்சை வாசம் போகும்வரை வதக்கவும். இதில் பாலை ஊற்றி வேகவிடவும். வெந்ததும் ஜீனி சேர்த்துக் கிளறி இறுகியதும் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் ஏலப்பொடியைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...