தாளிச்ச இடியாப்பம்.
தாளிச்ச இடியாப்பம்.
தேவையானவை:- இடியாப்ப மாவு - 1 கப் , தயிர் - 1 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1, கருவேப்பிலை - 1 இணுக்கு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.
செய்முறை:- இடியாப்பமாவை ஒரு பேசினில் போட்டு கால் டீஸ்பூன் உப்பைத் தூவவும். முக்கால் கப் தண்ணீரைக் கொதிக்கவைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாவில் ஊற்றிக் கரண்டிக் காம்பால் கிளறவும். லேசாக எண்ணெயும் சேர்க்கலாம். நன்கு டைட்டாக இருக்கும்போது மாவை நன்கு பிசைந்து இடியாப்பக் கட்டையில் போட்டு இட்லிச் சட்டியில் பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுத்து உதிர்த்து வைக்கவும்.
தயிரை சிறிது நீர் சேர்த்துக் கடைந்து மாவில் தெளித்துப் பிசறி விடவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்துப் பெரியவெங்காயம் இரண்டாக நறுக்கிய பச்சைமிளகாய், கருவேப்பிலை தாளித்து மீதி உப்பைத் துவி இடியாப்பத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும். இத்துடன் பச்சடி , கத்திரிக்காய் கோசமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக