மசாலச் சீயம்
தேவையானவை:- பச்சரிசி - 1 ஆழாக்கு, வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 ஆழாக்கு, உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் பொறிக்கத் தேவையான அளவு, தேங்காய் - 1 மூடி துருவியது, சின்ன வெங்காயம் - 20 தோலுரித்துப் பொடியாக நறுக்கவும், கடுகு - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 கொத்து, பச்சைமிளகாய் - 2 பொடியாக நறுக்கவும்.
செய்முறை:- பச்சரிசி, உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். உப்பு சேர்த்து வெண்ணெய் போல அரைக்கவும். ஒரு பானில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பச்சைமிளகாய், கருவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு வதக்கி மாவில் போட்டு நன்கு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். கதம்பச் சட்னியுடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக