கேக் முட்டைக் குழம்பு
தேவையானவை:- கேக் துண்டுகள் செய்ய:- முட்டை - 6, பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கவும், ஜீரகம் மிளகு பொடி - 1/2 டீஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன்.
செய்முறை:- முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, மிளகு சீரகப் பொடி போட்டு நன்கு கலக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி முட்டைக் கலவையை ஊற்றி ஆவியில் 10 நிமிடம் வேடவிடவும். அல்லது குக்கரில் தண்ணீர் ஊற்றி வெயிட் போடாமல் பத்து நிமிடம் வைக்கலாம். ஆறியவுடன் சதுரமாகவோ, டைமண்ட் ஷேப்பிலோ துண்டுகள் செய்யவும்.
குழம்புக்கு :- சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப் பூண்டு - 7, தக்காளி - 2, மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், மல்லிப் பொடி - 3 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ( அரைத்தது), எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1/2 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.
செய்முறை:- ஒரு பானில் எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு வெடித்தவுடன் உளுந்து ஜீரகம் போடவும். கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு நன்கு வதக்கவும். உப்பு , புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும். அதில் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடியைப் போடவும். இந்தக் கலவையை பானில் ஊற்றி கொதிவரச் செய்யவும். இதில் அரைத்த தேங்காயைச் சேர்க்கவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் அதில் வெட்டிய முட்டைத்துண்டுகளைப் போடவும். 4 நிமிடம் கொதித்ததும் இறக்கி சூடாக சாதத்தோடு பரிமாறவும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக