எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 நவம்பர், 2021

11.ப்ராகோலி புலவ்

11.ப்ராகோலி புலவ்

 


தேவையானவ:- பாசுமதி அரிசி – 2 கப், ப்ராகோலி – 1, பட்டர் பீன்ஸ் – ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2,பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன், தயிர் – அரை கப், உப்பு – 1 டீஸ்பூன், கொத்துமல்லித் தழை – 1 டேபிள் ஸ்பூன், புதினா – 20 இலை., நெய் – 30 கி, அரைக்க:- முந்திரி – 4, கசகசா – 1 டீஸ்பூன், தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன், தாளிக்க :- பட்டை கிராம்பு ஏலக்காய் – தலா 2, சோம்பு – 4 டீஸ்பூன்.

 


செய்முறை:- பாசுமதி அரிசியைக் களைந்து  சிறிது நெய்யில் வறுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளி, ப்ராகோலியைத் துண்டுகளாக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காயைப் போடவும். பொரிந்ததும் வெங்காயத்தை வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும். லேசாக சிவந்ததும் ப்ராகோலி, பட்டர் பீன்ஸைப் போடவும். கிளறிவிட்டு பச்சை மிளகாய் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். தயிர் சேர்த்து மூடி 5 நிமிடம் சிம்மில் வேகவிடவும். இதில் அரிசியையும் அரைத்து வடிகட்டிய தேங்காய் முந்திரித் தண்ணீரையும் சேர்க்கவும். உப்பு போட்டு நன்கு கிளறி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ( அதிகம் வெந்தால் ப்ராகோலி குழைந்துவிடும் ) புதினா கொத்துமல்லியைத் தூவிப் பரிமாறவும்.

ஞாயிறு, 7 நவம்பர், 2021

10.வேப்பம்பூ எலுமிச்சை ரசம்

10.வேப்பம்பூ எலுமிச்சை ரசம்

 


தேவையானவை :- வேப்பம்பூ – 1 கைப்பிடி, எலுமிச்சை – 1., நெய் – 1 டீஸ்பூன், மிளகு சீரகத்தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 டீஸ்பூன், பருப்பு கடைந்த தண்ணீர் – 2 கப், கடுகு – 1 டீஸ்பூன், வெந்தயம் – ½ டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன்., வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – ½ டீஸ்பூன், கொத்துமல்லித் தழை அரிந்தது – 1 டீஸ்பூன்

 


செய்முறை:- நெய்யைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்ததும் வெந்தயம் சீரகம் போட்டு பொரிந்ததும் அதிலேயே இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை போடவும். அதில் வேப்பம்பூவைப் போட்டுப் புரட்டி வறுத்து பருப்பு கடைந்த தண்ணீரை ஊற்றவும். அதில் மிளகு சீரகத்தூளையும் மஞ்சள் பொடியையும் உப்பையும் சேர்க்கவும். நுரைத்து வரும்போது இறக்கி ஒரு எலுமிச்சையை விதையில்லாமல் சாறு பிழிந்து சேர்த்து கொத்துமல்லித் தழை போட்டு மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து உபயோகிக்கவும். 

 

புதன், 3 நவம்பர், 2021

9.வேப்பம்பூ வெல்லப் பச்சடி

9.வேப்பம்பூ வெல்லப் பச்சடி

 


தேவையானவை :- வேப்பம்பூ - காயவைத்தது 2 கைப்பிடி, பாசிப்பருப்பு - 1 கைபிடி, வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன், புளி - 2 சுளை, உப்பு - 1/2 டீஸ்பூன், தாளிக்க:-, நெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1 இரண்டாக கிள்ளி வைக்கவும்.

 

செய்முறை :- பாசிப்பருப்பை வேகவைக்கவும். அதில் உப்பு புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கும்போது நெய்யில் கடுகு , சீரகம், காய்ந்த மிளகாய், வேப்பம்பூ ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்துப் போடவும். ஒரு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து இறக்கவும். நீர்க்க இருந்தால் ஒரு டீஸ்பூன் பச்சரிசி மாவு கரைத்து ஊற்றவும். இதில் உப்பு, புளிப்பு, கசப்பு இனிப்பு காரம் எல்லாம் இருக்கும்

 

வியாழன், 28 அக்டோபர், 2021

8.குங்குமப்பூ பால் ப்ரெட்

8.குங்குமப்பூ பால் ப்ரெட்

 


தேவையானவை:- பால் - அரை லிட்டர், குங்குமப்பூ -2 கி, சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன், மில்க் ப்ரெட் – 8 ஸ்லைஸ்.

 

செய்முறை:- பாலைக் காய்ச்சவும். கொதி வந்ததும் குங்குமப்பூவையும் சர்க்கரையையும் சேர்த்து ஐந்து நிமிடம் நிறம் மாறும் வரை காய்ச்சி இறக்கவும். மில்க்


ப்ரெட்டை அப்படியேவோ அல்லது டோஸ்ட் செய்தோ தனித்தனி ப்ளேட்டுகளில் அடுக்கவும். குங்குமப்பூ பால் சூடு அடங்கி வெதுவெதுப்பாய் வந்ததும் ப்ரெட் ஸ்லைஸ்களின் மேல் ஊற்றிப் பரிமாறவும். 

திங்கள், 25 அக்டோபர், 2021

7.குங்குமப்பூ கல்கண்டு சாதம்

7.குங்குமப்பூ கல்கண்டு சாதம்

 


தேவையானவை :- பாசுமதி அரிசி – 1 கப், குங்குமப்பூ – 2 கி, பால் – 2 கப், கல்கண்டு – 1 டேபிள்  ஸ்பூன்,  உப்பு – 1 சிட்டிகை, நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 6, பாதாம் – 6, கிஸ்மிஸ் – 6, பட்டை  இலை – 1 சிறுதுண்டு, ஏலக்காய் – 3, கிராம்பு – 1, ஆப்பிள் – ½ இன்ச் துண்டுகள் = 6 பைனாப்பிள் – ½ இன்ச் துண்டுகள் = 6.

 


செய்முறை:- பாதாம் முந்திரியை ஊறவைத்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். பாசுமதி அரிசியைக் களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு பால் ஊற்றிக் குக்கரில் வேகப் போடவும். ஒரு டேபிள் ஸ்பூன் பாலை சூடுபடுத்திக் குங்குமப்பூவைப் போட்டு வைக்கவும். பாசுமதி அரிசி வெந்ததும் உதிர்த்துக்கொள்ளவும். பானில் நெய்யைக் காயவைத்துப் பட்டை இலை, ஏலக்காய், கிராம்பு தாளிக்கவும். அதில் முந்திரி பாதாமைப் போட்டு வதக்கி கிஸ்மிஸ், ஆப்பிள், பைனாப்பிளை சேர்க்கவும். உப்பையும் பொடித்த கல்கண்டையும் சேர்த்து பாலில் கரைத்த குங்குமப்பூவை ஊற்றவும். வேகவைத்த பாசுமதி சாதத்தையும் போட்டு நன்கு கலந்து சிறிது நேரம் வைத்திருந்து உபயோகப் படுத்தவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...