எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 மே, 2022

பச்சை அவரை குருமா

பச்சை அவரை குருமா



தேவையானவை:- பச்சை அவரை – 1 கப், பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1, தேங்காய் -  1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 6, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 2 பல், கொத்துமல்லித்தழை - சிறிது , கருவேப்பிலை - 1 இணுக்கு. உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று.

செய்முறை:- வெங்காயம் தக்காளியையும் துண்டுகளாக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை அவரை , கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். ஓரிரு நிமிடம் வதங்கியதும் அரைத்த தேங்காய்க் கலவையை ஊற்றி லேசாகத் திறக்கவும். 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்துப் பச்சை அவரை வெந்ததும் இறக்கி சாதத்தோடு பரிமாறவும்.

 

ஞாயிறு, 1 மே, 2022

காலிதால் மாக்னி

காலிதால் மாக்னி



தேவையானவை:- கருப்பு உளுந்து இரண்டாக உடைத்தது - 1 கப், ராஜ்மா - 1/4 கப் ( விரும்பினால்), பெரிய  வெங்காயம் - 2 பொடியாக அரியவும்., இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், தக்காளி - 2 பொடியாக அரியவும்., பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை, சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-ராஜ்மாவையும் கறுப்பு உளுந்தம் பருப்பையும் தோலுடன் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும். 3 கப் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை வேக விடவும். ஒரு பானில் எண்ணெயைச் சூடாக்கி அதில் பெருங்காயம், சீரகத்தைத் தாளிக்கவும். சீரகம் வெடித்ததும் வெங்காயம் போட்டு ப்ரவுனாகும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.  பின் தக்காளி, உப்பு, சிவப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், போட்டு வதக்கி வெந்த உளுந்தைச் சேர்க்கவும் . 5 நிமிடம் வேகவைத்து க்ரீமை மத்தால் நன்கு கடைந்து ஊற்றவும். நெய்யைக் காயவைத்து ஊற்றி நன்கு கலக்கிப் பரிமாறவும்.

 

வியாழன், 28 ஏப்ரல், 2022

கொள்ளு பார்லி சூப்

கொள்ளு பார்லி சூப்



தேவையானவை:- கொள்ளு – ஒரு கப், பார்லி – அரை கப் எடுத்துத் தனித்தனியாக லேசாக வறுத்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். தக்காளி – 1, பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 டீஸ்பூன், தண்ணீர் – 3 கப், எண்ணெய் – 1 டீஸ்பூன், கல்பாசிப்பூ, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1, சோம்பு, சீரகம், உளுந்து, மிளகு – தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை, கொத்துமல்லி – சிறிது.

செய்முறை:- பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். ப்ரஷர் பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து சோம்பு, சீரகம், மிளகு தாளித்துப் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். இதில் வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லி போட்டு வதக்கி மஞ்சள் தூள் , உப்பு சேர்க்கவும். கொள்ளுப் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், பார்லிப் பொடி அரை டேபிள் ஸ்பூன் போட்டு மூன்று கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வைத்து இறக்கவும்.

 

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

பேபிகார்ன் சூப்

பேபிகார்ன் சூப்



தேவையானவை:- பேபிகார்ன்  - 4, வேகவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1 நீளமாக நறுக்கவும், தக்காளி - 1 துண்டுகளாக்கவும்., பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் , நெய் - 2 டீஸ்பூன், உளுந்து - 1/2 டீஸ்பூன், சோம்பு - 1/3 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், பட்டை - 1 இன்ச், இலை - இன்ச், கல்பாசிப்பூ - 1 இன்ச், ஏலக்காய் - 1, கருவேப்பிலை - 1 இணுக்கு., கொத்துமல்லி தழை - 1 டீஸ்பூன்., உப்பு - 1 டீஸ்பூன், பால் - 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:-

 

பேபிகார்னை மெல்லிய  வட்டத் துண்டுகளாக வெட்டவும். ஒரு பானில் எண்ணெய்/ நெய் ஊற்றி உளுந்து, சோம்பு, சீரகம்., மிளகு, கல்பாசிப்பூ., பட்டை., இலை., ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி., கருவேப்பிலை., பச்சை மிளகாய், பேபிகார்ன் போட்டு நன்கு வதக்கவும். துவரம்பருப்பை நன்கு மசித்து 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பானில் ஊற்றவும். கொதி வந்ததும் சிம்மில் மூடி போட்டு 7 நிமிடம் வேக விடவும். பால் ஊற்றி கொத்துமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

 

வியாழன், 21 ஏப்ரல், 2022

சிகப்பு சோயா பிரட்டல்

சிகப்பு சோயா பிரட்டல்



தேவையானவை :- சிவப்பு சோயா/பட்டர் பீன்ஸ் –  1 கப் உரித்தது. பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, சோம்பு மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி, உப்பு – கால் தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் – கால் டீஸ்பூன் ( தேவைப்பட்டால் ), எண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, இலை – சிறிது.

செய்முறை:- சிவப்பு பட்டர்பீன்ஸை உரித்து குக்கரில் போட்டு ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். எண்ணெயில் பட்டை, இலை, கிராம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு வதக்கி அதில் சோம்பு மிளகாய்த்தூளும் உப்பும் சேர்த்து திறக்கவும். இதில் தக்காளியையும் போட்டு வதக்கி வேகவைத்த பட்டர்பீன்ஸை தண்ணீருடன் ஊற்றவும்.  நன்கு வெந்ததும் இறக்கவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...