எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 15 மே, 2022

சன்னா கட்லெட்

சன்னா கட்லெட்



தேவையானவை:- கறுப்புக் கொண்டைக் கடலை – 1 கப், உருளைக்கிழங்கு – 1, ப்ரெட் – 1 ஸ்லைஸ், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – அரை இஞ்ச் துண்டு, கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, வெண்ணெய் – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், ரஸ்க் தூள் – கால் கப், எண்ணெய் – 100 மிலி

செய்முறை:- கறுப்புக் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். 4, 5 விசில் குக்கரில் வேகவைத்து நீரை வடித்துக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துப் போடவும். இதில் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லித்தழை, உப்பு, வெண்ணெய், ப்ரெட், மிளகாய்த்தூள் போட்டுப் பிசையவும். கட்லெட்டுகளாகத் தட்டி ரஸ்கில் புரட்டி நான் ஸ்டிக் பானில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும். 

 

புதன், 11 மே, 2022

பீட்ரூட் பயறு தோசை

பீட்ரூட் பயறு தோசை



தேவையானவை :- பச்சைப் (பாசிப்) பயறு - 200 கிராம்., பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது., பீட்ரூட் - 1 /8 துண்டு., பச்சை மிளகாய் – 1, பூண்டு - 3 பல், இஞ்சி - 1 இன்ச் துண்டு, மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன், துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லி இலை - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 20 கிராம்.

செய்முறை :-

பாசிப்பயறை முதல்நாள் பகலில் கழுவி ஊறவைத்து முளை கட்டவும். மறுநாள் முளைவிட்ட பயறு., பச்சை மிளகாய்., இஞ்சி., பூண்டு., மிளகாய்ப் பொடி., உப்பு., ஜீரகம்., தேங்காய்த்துருவல்., பீட்ரூட்., கொத்துமல்லித்தழை., வெங்காயம் எல்லாம் போட்டு கரகரப்பாக அரைக்கவும் . மெல்லிய தோசைகளாகச் சுட்டு எடுத்துக் கதம்பச் சட்னியோடு பரிமாறவும்.

 

ஞாயிறு, 8 மே, 2022

பச்சைப் பட்டாணி பனீர் துவட்டல்

பச்சைப் பட்டாணி பனீர் துவட்டல்



தேவையானவை:- பச்சைப் பட்டாணி – 1 கப்,பனீர் – 100 கி, பெரிய வெங்காயம் – 1, பச்சைமிளகாய் – 2, எண்ணெய் – 3 டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:- பெரிய வெங்காயம் பச்சை மிளகாயைப் பொடியாக அரியவும். பனீரைப் பூப்பூவாக உதிர்த்துக் கொள்ளவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்துப் பெரிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்க்கவும். இதில் பச்சைப் பட்டாணியைப் போட்டு வதக்கி உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். இரு நிமிடம் வெந்ததும் பனீர் துருவலைச் சேர்த்து மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

 

வியாழன், 5 மே, 2022

பச்சை அவரை குருமா

பச்சை அவரை குருமா



தேவையானவை:- பச்சை அவரை – 1 கப், பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1, தேங்காய் -  1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 6, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 2 பல், கொத்துமல்லித்தழை - சிறிது , கருவேப்பிலை - 1 இணுக்கு. உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று.

செய்முறை:- வெங்காயம் தக்காளியையும் துண்டுகளாக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை அவரை , கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். ஓரிரு நிமிடம் வதங்கியதும் அரைத்த தேங்காய்க் கலவையை ஊற்றி லேசாகத் திறக்கவும். 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்துப் பச்சை அவரை வெந்ததும் இறக்கி சாதத்தோடு பரிமாறவும்.

 

ஞாயிறு, 1 மே, 2022

காலிதால் மாக்னி

காலிதால் மாக்னி



தேவையானவை:- கருப்பு உளுந்து இரண்டாக உடைத்தது - 1 கப், ராஜ்மா - 1/4 கப் ( விரும்பினால்), பெரிய  வெங்காயம் - 2 பொடியாக அரியவும்., இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், தக்காளி - 2 பொடியாக அரியவும்., பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை, சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-ராஜ்மாவையும் கறுப்பு உளுந்தம் பருப்பையும் தோலுடன் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும். 3 கப் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை வேக விடவும். ஒரு பானில் எண்ணெயைச் சூடாக்கி அதில் பெருங்காயம், சீரகத்தைத் தாளிக்கவும். சீரகம் வெடித்ததும் வெங்காயம் போட்டு ப்ரவுனாகும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.  பின் தக்காளி, உப்பு, சிவப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், போட்டு வதக்கி வெந்த உளுந்தைச் சேர்க்கவும் . 5 நிமிடம் வேகவைத்து க்ரீமை மத்தால் நன்கு கடைந்து ஊற்றவும். நெய்யைக் காயவைத்து ஊற்றி நன்கு கலக்கிப் பரிமாறவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...