எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 மார்ச், 2022

பாசிப்பயறு கிச்சடி

பாசிப்பயறு கிச்சடி



தேவையானவை:-பச்சரிசி – 1 கப், உடைத்த பாசிப்பயறு ( மூங்க்தால் ) – ½ கப், தக்காளி – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்., ஆம்சூர் – ½ டீஸ்பூன் ( மாங்காய் பொடி – தேவைப்பட்டால் ), உருளைக்கிழங்கு சின்னம் – 1 சிறுதுண்டுகளாக நறுக்கவும்., உப்பு – 1 டீஸ்பூன், தாளிக்க :- நெய் – 2 டீஸ்பூன், ஜீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:-பச்சரிசியைக் களைந்து உடைத்த பாசிப்பயறைச் சேர்த்து தக்காளி, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, 3 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் குக்கரில் வைத்து எடுக்கவும். ஆறியதும் உப்பும் ஆம்சூர் பொடியும் சேர்த்து லேசாக மசித்து நெய்யில் ஜீரகம் தாளித்துப் போடவும்.

 

ஞாயிறு, 27 மார்ச், 2022

மொச்சை மண்டி

மொச்சை மண்டி



தேவையானவை:- மொச்சை - 1 கப், அரிசி களைந்த கெட்டிக் கழுநீர்/மண்டி -2 கப், வெண்டைக்காய் - 8, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 8 பல் , பச்சை மிளகாய் - 10, தக்காளி - சின்னம் 1, புளி - எலுமிச்சை அளவு, உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா - 1 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு. கருவேப்பிலை - 1 இணுக்கு.  மண்டிப் பொடி :- ஒரு டீஸ்பூன் பச்சரிசி கால் டீஸ்பூன் வெந்தயம், நகக்கண் அளவு பெருங்காயத்தை வறுத்து நுணுக்கி வைக்கவும்.

செய்முறை:-  மொச்சையை முதல்நாளே ஊறப்போடவும். மறுநாள் குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவைத்து நீரை வடித்து வைக்கவும். வெண்டைக்காய், வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து துண்டுகளாக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றிக் கடுகு உளுந்து பெருங்காயம் வெந்தம் தாளித்துப் பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பூண்டு, வெண்டிக்காயைப் போட்டு வதக்கவும். அரிசி மண்டியில் உப்புப் புளியை ஊறப்போட்டுக் கரைத்து ஊற்றவும். இவை எல்லாம் கொதித்து வரும்போது மொச்சையைச் சேர்க்கவும். மண்டிப்பொடியைப் போட்டுக் கலக்கிவிட்டு இறக்கவும்.

 

புதன், 23 மார்ச், 2022

ராஜ்மா மசால்

ராஜ்மா மசால்


தேவையானவை:- ராஜ்மா - 1 கப், பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது, தக்காளி - 1 நறுக்கியது, பூண்டு - 4 (விரும்பினால்), மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், மல்லிப் பொடி - 1 டீஸ்பூன், கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, உப்பு - 1/2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், சோம்பு - 1/4 டீஸ்பூன், பட்டை - 1 இன்ச் துண்டு, இலை - 1 துண்டு, கல்பாசிப்பூ - 1 துண்டு, எண்ணெய் - 5 மிலி

செய்முறை :-  ராஜ்மாவைக் கழுவி 8 மணி நேரம் ஊறவைக்கவும். ப்ரஷர் குக்கரில் 4., 5 விசில் வரும் வரை வேகவைக்கவும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து., சோம்பு போட்டு சிவந்ததும்., பட்டை., கல்பாசிப்பூ., இலை போடவும். பெரிய வெங்காயம்., தக்காளி., பூண்டு போட்டு., நன்கு வதக்கவும். மிளகாய்த்தூள்., மல்லித்தூள்., மஞ்சள்தூள்., கரம் மசாலா போட்டு உப்பு சேர்க்கவும். கடைசியாக வெந்த ராஜ்மாவைப் போட்டு நன்கு கிளறவும். 5 நிமிடம் மசாலா நன்கு சேரும் வரை வைக்கவும். சப்பாத்தியுடன் பரிமாறவும்..

 

ஞாயிறு, 20 மார்ச், 2022

காராமணி மாவத்தக் குழம்பு

காராமணி மாவத்தக் குழம்பு



தேவையானவை :- தட்டைப்பயறு ( காராமணி ) - 1 கப், மாங்காய் வற்றல் – 10, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 2, தக்காளி – 1, மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்பொடி - 1 சிட்டிகை., புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- தட்டைப்பயறை வறுத்து பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். மாவற்றல்., தக்காளி., வெங்காயத்தை சின்ன தட்டில் குக்கரில் வைத்து வேகவிடவும். ஆவி வெளியேறியதும் இரண்டையும் நன்றாக கலந்து மிளகாய் பொடி., மல்லி பொடி., மஞ்சள் பொடி போடவும். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் சேர்க்கவும். கொதிவந்தபின் சிம்மிம் 5 நிமிடம் வைத்து., எண்ணையில் கடுகு., ஜீரகம் தாளித்து கொட்டவும். பூண்டு தட்டிப் போட்டு இறக்கவும். இதை சாதம் அல்லது ஊத்தப்பம் அல்லது இட்லியுடன் பரிமாறவும்.


 

வியாழன், 17 மார்ச், 2022

கோஸ் முளைகட்டிய பயறு துவட்டல்

கோஸ் முளைகட்டிய பயறு  துவட்டல்

தேவையானவை:- முளைவிட்ட பச்சைப்பயறு - 200 கிராம், முட்டைக்கோஸ் - 200 கிராம், பெரிய வெங்காயம் – 1, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன்,உளுந்து - 1 டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை_ 1 இணுக்கு

 

செய்முறை :- முளை விட்ட பச்சைப் பயறை அரை வேக்காடு வேகவைத்துக் கொள்ளவும். முட்டைக்கோஸை கழுவி நறுக்கவும். வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி முட்டைக்கோஸை சேர்த்து சிறிது வதக்கவும். வேகவைத்த பயறையும் உப்பையும் சேர்த்து சிறிது 
தண்ணீர்
 தெளித்து மூடி போட்டு சிம்மில் 5 நிமிடம் வேகவிடவும். சூடாக சுண்டலாகவோ., சாம்பார்., குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ளவோ பரிமாறவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...