எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூன், 2022

கருவேப்பிலைக் காய்ச்சல்

கருவேப்பிலைக் காய்ச்சல்

 


தேவையானவை :- கருவேப்பிலை – 1 கட்டு, புளி - 1 தக்காளி அளவு உருண்டை, உப்பு - 2 டீஸ்பூன், வரமிளகாய் – 5, கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 2 டீஸ்பூன், கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன் பெருங்காயம் - 1 இன்ச் துண்டு, வெந்தயம் - 1/2 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை சுத்தம் செய்தது - 1 டேபிள் ஸ்பூன், தூள் வெல்லம் - 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.


 

செய்முறை :-கருவேப்பிலையை சுத்தம் செய்து சிறிது நீர் விட்டு நன்கு அரைக்கவும். புளி., உப்பை இரண்டு கப் தண்ணீரில் ஊறப் போட்டுப் புளிச்சாறு எடுத்துக் கொள்ளவும்.. மிளகாய்களை இரண்டாகக் கிள்ளி விதை நீக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுந்து., கடலைப் பருப்பு., பெருங்காயம்., வெந்தயம், வரமிளகாய் போடவும். அவை சிவந்ததும் கருவேப்பிலை விழுதைப்போட்டுச் சிறிது வதக்கிப் புளிச்சாறை மஞ்சள்தூளுடன் கலந்து ஊற்றவும். நன்கு கொதிக்க வைத்து கெட்டியாகும் போது வெல்லத்தூள் சேர்க்கவும். அவ்வப்போது கிண்டி விடவும். ஓரங்களில் எண்ணெய் பிரியும் போது வேர்க்கடலையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

 

ஞாயிறு, 26 ஜூன், 2022

புதினா புலவ்

புதினா புலவ்

 


தேவையானவை :- பாசுமதி அரிசி - 1 கப், பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது., தக்காளி - 1 பொடியாக அரிந்தது, அரைக்க:- புதினா - 1 கட்டு, கொத்துமல்லி - 1 கைப்பிடி, பச்சை மிளகாய் - 1 அல்லது 2, தேங்காய் - 3 இன்ச் துண்டு, இஞ்சி - 1 இன்ச் துண்டு, பூண்டு - 4 பல், சோம்பு - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், மிளகு – 10, தாளிக்க :- எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், பட்டை - 1 இன்ச் துண்டு, கிராம்பு – 2, ஏலக்காய் – 1, இலை - 1 இன்ச் துண்டு, அன்னாசிப் பூ - 1



 

செய்முறை :- புதினா., கொத்துமல்லியை கழுவி ., சுத்தம் செய்து மற்ற பொருட்களுடன் போட்டு நன்கு அரைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அரிசியை நன்கு களையவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை ., கிராம்பு., ஏலக்காய்., இலை., அன்னாசிப்பூ எல்லாம் தாளிக்கவும். அதில் வெங்காயம்., தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். அரிசியை சேர்க்கவும். உப்பு சேர்த்து அரைத்த தண்ணீரை சேர்க்கவும். நன்கு கிளறி ஒன்று அல்லது இரண்டு விசில் வைத்து குக்கரை இறக்கவும். பத்து நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து சூடாக புதினா புலவை வெள்ளரி காரட் சாலட்., பைன் ஆப்பிள் ரெய்த்தா., அவித்த முட்டை., உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்..

வியாழன், 23 ஜூன், 2022

கொத்துமல்லி கட்லெட்

கொத்துமல்லி கட்லெட்


 

தேவையானவை :- முந்திரி – 8, கொத்துமல்லி – அரைக் கட்டு, கடலை மாவு – 2 டீஸ்பூன், அவித்த உருளைக்கிழங்கு – 1, ப்ரெட் – 3 ஸ்லைஸ், பெரிய வெங்காயம் – பாதி, கரம் மசாலா – 1 சிட்டிகை, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி – அரை இன்ச் துருவியது, பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது, வெண்ணெய் – 1 டீஸ்பூன், மைதா – அரை கப், மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், ப்ரெட் க்ரம்ப்ஸ் – கால் கப், , எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.


 

செய்முறை:- கொத்துமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் இஞ்சி பச்சை மிளகாய் வெங்காயத்தை வதக்கி கடலைமாவைப் போடவும். லேசாக வறுபட்டதும் கொத்துமல்லியைப் போட்டு கரம்மசாலா, மிளகாய்த்தூள் வெண்ணெயைப் போட்டு அரை டீஸ்பூன் உப்புப் போட்டு நன்கு புரட்டவும். வெந்து உருண்டதும் இறக்கி முந்திரியை உள்ளே வைத்து ஓவல் சைஸில் சின்னச் சின்னக் கட்லெட்டுகளாகச் செய்யவும். அவித்த உருளைக்கிழங்கில் ப்ரெட்டைப் போட்டு உப்பு மிளகாய்ப் பொடி போட்டு லேசாக நீர் தெளித்துப் பிசைந்து கப் போல செய்து கொத்துமல்லி கட்லெட்டுகளை இதனுள் வைத்து நன்கு உருட்டவும். மைதாவில் உப்பு மிளகாய்த்தூள் போட்டுக் கரைத்து கட்லெட்டுகளை நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் புரட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்

 

ஞாயிறு, 19 ஜூன், 2022

புதினா கொத்துமல்லி கருவேப்பிலை சூப்

புதினா கொத்துமல்லி கருவேப்பிலை சூப்


 

தேவையானவை:- (ஒரு கட்டு கருவேப்பிலை, ஒரு கட்டு புதினா, ஒரு கட்டு கொத்துமல்லியில்) ஆய்ந்த தளிர் இலைகள் மட்டும். – தலா ஒரு பெரிய கைப்பிடி அளவு எடுத்து அலசி வைக்கவும், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சைமிளகாய் – 1 , வேகவைத்த துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், பட்டை – 1, இலை – 1, கல்பாசிப்பூ -1, சோம்பு -1/2 டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – ½ டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், பால் – 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்

 

செய்முறை:- பெரிய வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.  பச்சைமிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு சீரகம் மிளகு, பட்டை, இலை, கல்பாசிப்பூ தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆய்ந்து கழுவிய தளிர் இலைகள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள் உப்பு வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும்.ஆறியதும் திறந்து பச்சை மிளகாயை எடுத்துப் போட்டு விட்டு  நன்கு மசித்து அந்தச் சாறை வடிகட்டவும். இரு முறை ஒரு கப் நீரூற்றிப் பிசைந்து வடிகட்டி எடுக்கவும்.இதில் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். இறக்கி பாலும் மிளகுத்தூளும் கலந்து குடிக்கக் கொடுக்கவும்.

 

வியாழன், 16 ஜூன், 2022

வல்லாரை வத்தக்குழம்பு

வல்லாரை வத்தக்குழம்பு


 

தேவையானவை:- வல்லாரை - 2 கைப்பிடி, சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, உப்பு - 2 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சை அளவு. தாளிக்க:- எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், வெந்தயம் -  டீஸ்பூன், பெருங்காயம் - 1/4 இன்ச் துண்டு, துவரம் பருப்பு -  1 டீஸ்பூன்

 

செய்முறை:- உப்புப் புளியைக் கரைத்து ஒரு டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு வைத்துக் கொள்ளவும். கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் துவரம்பருப்பு தாளித்துப் புளிக்கரைசலை ஊற்றவும். குழம்பு கொதிக்கும்போது பொடியாக அரிந்த வல்லாரையைப்  போடவும். குழம்பு வத்தி எண்ணெய் பிரிந்ததும் இறக்கி பரிமாறவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...