எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

TURKEYBERRY TAMARIND GRAVY . .. சுண்டைக்காய் புளிக்குழம்பு..


TURKEYBERRY TAMARIND GRAVY:-
NEEDED :-
TURKEYBERRY - 1 CUP
SMALL ONION - 10 NOS
GARLIC - 6 PODS
TOMATO - 1 NO
TAMARIND - 1 LEMON SIZE BALL
SALT - 2 TSP
RED CHILLI POWDER - 2 TSP
DHANIA POWDER - 1 TBL SPN
TUMERIC POWDER - 1 PINCH.
ASAFOETIDA - 1/8 INCH PIECE.
CURRY LEAVES - 1 ARK
MUSTARD - 1 TSP
JEERA- 1/2 TSP
FENUGREEK - 1 /2 TSP
SUGAR - 1 PINCH
OIL - 1 TBLSPN.

METHOD :-
HALVE THE TURKEY BERRIES AND WASH THEM IN WATER. PEEL SMALL ONION., GARLIC., AND HALVE THEM. DICE TOMATO. SOAK TAMARIND AND SALT IN 3 CUPS OF WATER AND TAKE THE PULP. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD JEERA., AND FENUGREEK., AND ASAFOETIDA. ADD CURRY LEAVES. ONION., GARLIC., TOMATO AND TURKEY BERRIES. SAUTE THEM WELL. POUR THE TAMARIND PULP . ADD TURMERIC PWDR., CHILLI PWDR., AND DHANIA PWDR. BRING TO BOIL . ADD A PINCH OF SUGAR AND KEEP IT IN SIM COVERED WITH A LID FOR 20 MIN., AND THE OIL WILL SEPERATES. SERVE HOT WITH PLAIN RICE OR CURD RICE. OR WITH HOT IDDLIES.

சுண்டைக்காய் புளிக்குழம்பு :-
தேவையானவை :-
சுண்டைக்காய் - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
வெள்ளைப்பூண்டு - 6 பல்
தக்காளி - 1
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - 2 டீஸ்பூன்.
மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சப் பொடி - 1 சிட்டிகை
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
கருவேப்பிலை - 1 இணுக்கு
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீனி - 1 சிட்டிகை.
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :-
சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி தண்ணீரில் போடவும். சின்ன வெங்காயம்., வெள்ளைப் பூண்டை தோலுரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகள் செய்யவும். புளியையும்., உப்பையும் 3 கப் தண்ணீரில் ஊறப் போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்தவுடன் ., சீரகம்., வெந்தயம்., பெருங்காயம் போடவும். கருவேப்பிலை., வெங்காயம்., பூண்டு ., தக்காளி., சுண்டைக்காய்களைப் போட்டு நன்கு வதக்கவும். புளித்தண்ணீரை ஊற்றி மஞ்சள் பொடி., மிளகாய்ப்பொடி., மல்லிப் பொடி போடவும். நன்கு கொதி வந்தவுடன் சீனி சேர்த்து மூடி வைத்து 20 நிமிடம் சிம்மில் வைக்கவும். எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கி சாதம்., தயிர் சாதம் அல்லது சூடான இட்லிகளுடன் பரிமாறலாம்.

4 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...