ஆடிக்கூழ்
தேவையானவை:- பச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பிப் பொடித்துச் சலிக்கவும் இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும். - 1கப் (200 கி்ராம்), கருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் (200 கிராம்), நெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம்., தண்ணீர் - 4 கப்
செய்முறை:- பானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்தவுடன் வடிகட்டி மாவில் ஊற்றிக் கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின் அடுப்பில் வைத்துக் கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாகக் கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யை ஊற்றி இறக்கவும். சுடச் சுடப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக