எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 நவம்பர், 2025

பனீர் கேப்ஸிகம் சுக்கா சப்ஜி


பனீர் கேப்ஸிகம் சுக்கா சப்ஜி

தேவையானவை:- பனீர் - 200 கி சின்னச் சதுரமாக வெட்டவும். குடைமிளகாய் - 1 நீளமாக வெட்டவும். பெரிய வெங்காயம் - 2 நீளமாக வெட்டவும். இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், தக்காளி - 2. ( அரைக்கவும்), சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா பவுடர் - 1/4 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், சீனி - 1 சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- பனீரைக் கழுவி எண்ணெயில் பொறித்தெடுக்கவும். அதே எண்ணெயில் வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கி அரைத்த தக்காளியைச் சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, சீனி, கரம் மசாலா பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கித் தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். அதில் பனீரைச் சேர்த்து 5 நிமிடம் சமைத்து எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரித்  துண்டுகளுடன் சப்பாத்தி, ருமாலி ரோட்டி, நான், குல்சாவோடு பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...