ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் கேசரி
தேவையானவை :- வெள்ளை ரவை – 1 கப். சர்க்கரை – 2 கப், எண்ணெய் – கால் கப், நெய் – கால் கப், ஆப்பிள் – தோல் சீவி துண்டுகளாக்கியது ஒரு டேபிள் ஸ்பூன், பைனாப்பிள் – சுத்தம் செய்து துண்டுகளாக்கியது ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை கறுப்பு சீட்லெட் திராக்ஷைகள் – தலா 10. கிஸ்மிஸ் – 20, முந்திரி – 10. ஃப்ரூட்டி டூட்டி – கால் கப், பேரீச்சை – 2, பாதாம் 4, பிஸ்தா – 6, மிக்ஸ்ட் ஃப்ரூட் எஸ்ஸென்ஸ் – சிலதுளிகள், உப்பு – 1 சிட்டிகை. யெல்லோ ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை.
செய்முறை:- ஆப்பிள், பைனாப்பிள், திராக்ஷைகளை சிறிது சர்க்கரையில் புரட்டித் தனியாக வைக்கவும். இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். பானில் எண்ணெய் & நெய்யைக் காயவைத்து பாதாம், முந்திரியை வறுக்கவும். அதிகம் சிவக்குமுன் அதில் பிஸ்தா, கிஸ்மிஸைப் போடவும். அது பொரிந்து பெரிதானதும் ரவையைப் போடவும். ரவையை லேசாக வறுத்து அதில் கொதித்த தண்ணீரை ஊற்றி நன்கு கட்டியில்லாமல் கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும். வெந்ததும் சீனி சேர்த்து நன்கு கிளறவும். இதில் யெல்லோ ஃபுட் கலர், உப்பு, டூட்டி ஃப்ரூட்டி, சிறிதாக வெட்டிய பேரீச்சை, சீனியில் ஊறவைத்த பழங்களைப் போட்டு ஃப்ரூட் எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக