குல்தி கி டால்
தேவையானவை:- கொள்ளு – 1 கப், பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1, பூண்டு – 2 பல், மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன், மல்லிப்பொடி – அரை டீஸ்பூன். உப்பு – கால் டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:- கொள்ளை வறுத்துக் களைந்து 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவைக்கவும். அதில் பாதி எடுத்து மிக்ஸியில் லேசாக மசித்து மிச்ச கொள்ளோடு சேர்க்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்துப் பொடியாக அரிந்த வெங்காயம் தக்காளி பூண்டு தாளித்து மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி உப்பு சேர்க்கவும். வதங்கியதும் கொள்ளையும் சேர்த்து சுருளக் கிண்டி இறக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக