ஆலு டமாட்டர்.
தேவையானவை:- உருளைக்கிழங்கு – 2, தக்காளி – 3, ஜீரகம் - 1 டீஸ்பூன், வரமிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன், ஆம்சூர்ப் பொடி - 1/4 டீஸ்பூன், உப்பு - 1/3 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை:- உருளை மற்றும் தக்காளியை நன்கு கழுவி விரல் நீளத் துண்டுகளாக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஜீரகம் தாளிக்கவும். அதில் உருளை , தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். உப்பு, ஆம்சூர் பொடி, வரமிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்க்கவும். நன்கு கிளறி வேகவைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். ருமாலி ரோட்டி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக