ஷாஹி பனீர்
தேவையானவை:- பனீர் - 250 கிராம், பெரிய வெங்காயம் (அரைத்தது) – 1, பெரிய தக்காளி (அரைத்தது ) – 1, இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், சிகப்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன், மல்லி பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், சீனி - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :- பனீரை 1 இஞ்ச் அளவு துண்டுகளாக செய்து கடாயில் எண்ணெய் ஊற்றிப் பொறித்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும். அதே எண்ணையில் வெங்காயத்தை சிவக்க வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். அதுவும் சிவக்கையில் மிளகாய்ப் பொடி., மல்லிப் பொடி., மஞ்சப் பொடி., கரம் மசாலா பொடி ., உப்பு ., ஜீனி போடவும். தக்காளி விழுதை சேர்த்து கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் . பனீர் துண்டுகளைச் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். 7 முதல் 10 நிமிடங்கள் வரை சிறிய தீயில் சமைக்கவும். சப்பாத்தி அல்லது நான் கூட சூடாக பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக