எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 அக்டோபர், 2025

வெஜ் பேணி

வெஜ் பேணி



தேவையானவை:- பச்சரிசி – 2 கப்ஃபில்லிங்க் செய்ய:- அவித்த உருளைக்கிழங்கு – 1 ( பெரியது), பீட்ரூட் சின்னம் – 1 துருவவும்காரட் – 1 துருவவும்., பச்சைமிளகாய் – 1 பொடியாக நறுக்கவும்., இஞ்சி – 1 இன்ச் – பொடியாக நறுக்கவும்., மிளகு சீரகத்தூள் – 1 டீஸ்பூன்எண்ணெய் – 1 டீஸ்பூன்உப்பு – 1/3 டீஸ்பூன்., வெண்ணெய் – 1 டீஸ்பூன்கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன்

செய்முறை:- பச்சரிசியை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து நன்கு சலிக்கவும்ஒரு பாத்திரத்தில் 1 1/4 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு  ஒரு சிட்டிகை உப்புப் போட்டு மாவைத் தூவிப் பிசையவும்.. பந்துபோல உருண்டுவந்ததும் இறக்கி ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடிவைக்கவும்ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்துப்  பச்சைமிளகாய்இஞ்சிகாரட்பீட்ரூட் துருவலை வதக்கி இறக்கி வைத்து அதில் உப்புமசித்த உருளைக்கிழங்குபொடியாக அரிந்த  கொத்துமல்லித் தழைமிளகு ஜீரகத்தூள்வெண்ணெய் போட்டு நன்கு பிசைந்து பதினாறு உருண்டைகளாக உருட்டவும்மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால்  கிண்ணங்களாகத் தட்டி உள்ளே ஃபில்லிங்கை வைத்து  எருக்கலங்கொழுக்கட்டை மாதிரியோ அல்லது சோமாசி மாதிரியோ மடித்து ஓரங்களை நன்கு ஒட்டி ஆவியில் 10 – 15  நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...