எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 ஜூன், 2022

அரைக்கீரை துக்கடா

அரைக்கீரை துக்கடா

 


தேவையானவை:- அரைக்கீரை – 1 கட்டு, கடலை மாவு – 1டேபிள் ஸ்பூன், மைதாமாவு – ரெண்டு டீஸ்பூன், சோளமாவு – 2 டீஸ்பூன், கோதுமை மாவு – 2 டீஸ்பூன், பச்சரிசி மாவு – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும். உப்பு – கால் டீஸ்பூன், வெண்ணெய் – 1 டீஸ்பூன், எண்ணெய் பொரிக்கத்தேவையான அளவு.

 

செய்முறை:- அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பேசினில் கடலைமாவு, மைதாமாவு, சோளமாவு, கோதுமைமாவு, பச்சரிசி மாவு போட்டு மிளகாய்த்தூள், உப்பு வெண்ணெய் சேர்த்து நன்கு பிசறிவிடவும். அதில் கீரையையும் வெங்காயத்தையும் போட்டுப் பிசறி விடவும். காய்ந்த எண்ணெயில் சிறிது ஊற்றி தண்ணீர் தெளித்துப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து மிகச் சிறியதாக உதிர்த்து வேகவைத்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

 

ஞாயிறு, 29 மே, 2022

அகத்திக்கீரை மண்டி

அகத்திக்கீரை மண்டி

 


 

தேவையானவை :- அகத்திக்கீரை – 1 கட்டு, அரிசி களைந்த தண்ணீர் – 2 கப் திக்காக, தேங்காய்ப் பால் – 1 கப், சின்ன வெங்காயம் – 10, உளுந்து – அரை டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 1, எண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன்

 

செய்முறை :- அகத்திக்கீரையை ஆய்ந்து கழுவிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து, சீரகம் தாளித்துப் பொரிந்ததும் வரமிளகாய் சேர்க்கவும். அதன் பின் வெங்காயத்தை வதக்கிக் கீரையையும் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவும். கொதிவந்ததும் மூடி வைத்து சிம்மில் 10 நிமிடம் வேகவிடவும். நன்கு வெந்ததும் உப்பும் தேங்காய்ப் பாலும் சேர்த்து இறக்கவும்.தேங்காய்ப்பால் சேர்த்ததும் கொதிக்க விட வேண்டாம் திரைந்து போய்விடும். இதை அப்படியே சூப் போலவும் அருந்தலாம் சாதத்தில் போட்டும் சாப்பிடலாம்

 

வியாழன், 26 மே, 2022

முளைக்கீரை தயிர்க்கூட்டு

முளைக்கீரை தயிர்க்கூட்டு



 

தேவையானவை:- முளைக்கீரை, ஆய்ந்து கழுவி சுத்தம் செய்தது - 1 கட்டு, பாசிப்பருப்பு - 1/4 கப், பெரிய வெங்காயம், பொடியாக அரிந்தது - 1/4 கப், பூண்டு தோலுரித்து நசுக்கியது - 2 பல், சீரகம் - 1 டீஸ்பூன்,  பச்சை மிளகாய் - 1, தண்ணீர் -1/2 டம்ளர், உப்பு - ருசிக்குத் தேவையான அளவு. தயிர் – புளிக்காதது அரை கப். எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

 

செய்முறை:- முளைக்கீரையைக் கழுவிப் பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி வைக்கவும்.அதனுடன் ஊறவைத்த பாசிப்பருப்பு., வெங்காயம்., பூண்டுப் பல்., ரெண்டாக வகிர்ந்த பச்சை மிளகாய்., ஜீரகம்., தண்ணீர் மற்றும் உப்புடன் பிரஷர் பானில் போடவும். இரண்டு விசில் சத்தம் வரும் வரை வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு பிரஷர் பானைத்திறந்து., ஒரு மத்து அல்லது கரண்டியால் மசிக்கவும். தயிரை நன்கு கடைந்து கீரையில் சேர்த்துக் கலக்கவும். வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம்.

 

ஞாயிறு, 22 மே, 2022

மேத்தி தேப்லா

மேத்தி தேப்லா


 

தேவையானவை:- வெந்தயக் கீரை - 1 கட்டு, கோதுமை மாவு - 2 கப், ஓமம் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - 2 டீஸ்பூன், தயிர் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன். எண்ணெய் - சுட தேவையான அளவு.

 

செய்முறை:- வெந்தயக் கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கி மாவில் போட்டு அனைத்துப் பொருட்களையும் போட்டு தண்ணீர் தெளித்துப் பிசையவும். நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைத்து கனமான சப்பாத்திகளாகத் தேய்த்துத் தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.

 


செவ்வாய், 17 மே, 2022

சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ்.

 சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ். 



18 . 11. 2021  குமுதம் சிநேகிதி இதழுடன் வெளியான இணைப்பில் ” சத்தான கீரைகளில் முத்தான ரெஸிப்பீஸ்”  என்னும் தலைப்பில் எனது 23 சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.



இலைகளில் இத்தனை ஐட்டங்களா?

 

1. துளசி ரொட்டி

2. ஆலு மேத்தி

3. மேத்தி தேப்லா

4. முளைக்கீரை தயிர்க்கூட்டு

5. சுக்குடிக்கீரை கழனிச்சாறு

6. அகத்திக்கீரை மண்டி

7. அரைக்கீரை துக்கடா

8. முள்ளுமுருங்கை தோசை

9.முருங்கைக்கீரை அடை

10. தூதுவளை ரசம்

11. வல்லாரை வத்தக்குழம்பு

12. புதினா கொத்துமல்லி கருவேப்பிலை சூப்

13. கொத்துமல்லி கட்லெட்

14. புதினா புலவ்

15. கருவேப்பிலைக் காய்ச்சல்

16.பொன்னாங்கண்ணிப் பொரியல்

17. முள்ளங்கிக் கீரை துவட்டல்

18. சேம்பு இலை உசிலி

19. பாலக் பனீர்

20. கடுகுக்கீரை சப்ஜி

21. வெங்காயத்தாள் பச்சடி

22. சோம்பு இலை ரொட்டி

23. கோஸ் சௌமின்

இது நான்காவது குட்டி புக்.

முன்பே 

1. 30 வகை பிரியாணி , குமுதம் சிநேகிதிக்காக.



ஆகியன வெளியாகி உள்ளன.

நன்றி குமுதம் சிநேகிதி. 
 
Related Posts Plugin for WordPress, Blogger...