எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 18 அக்டோபர், 2022

பேசன் லட்டு

பேசன் லட்டு



தேவையானவை :- கடலை மாவு – 2 கப், நெய் – ½ கப், போரா ( பொடித்த சீனி ) – 1 கப், கிஸ்மிஸ் – 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 4 பொடிக்கவும். ( முந்திரி பாதாம் அக்ரூட் விரும்பினால் சேர்க்கலாம் )

செய்முறை:- கடலை மாவை வெறும் வாணலில் மிதமான தீயில் 10 நிமிடம் வறுக்கவும். நிறம் மாறி வறுபட்ட வாசனை வந்ததும் நெய்யை உருக்கி ஊற்றிக் கை விடாமல் 5 நிமிடம் திரும்ப வறுக்கவும். நல்ல மணமும் நிறமும் வந்தபின் கடாயைக் கீழிறக்கி வைத்து போராவைச் சேர்க்கவும். கட்டிபடாமல் கிளறி ஏலக்காயைப் பொடித்துப் போட்டு கிஸ்மிஸைச் சேர்த்து நன்கு கிளறி ஆறவைத்து முந்திரி பாதாம் அக்ரூட்டை சேர்த்து மென்மையான உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.



 

சனி, 15 அக்டோபர், 2022

பலம் சேர்க்கும் பருப்பு வகைகள்.

 பலம் சேர்க்கும் பருப்பு வகைகள்.



வியாழன், 13 அக்டோபர், 2022

20. கேரட் பாயாசம்

20. கேரட் பாயாசம்


 

தேவையானவை:- காரட் – 2, பால் – 3 கப் ஜீனி – ½ கப், மில்க்மெய்ட் – 1 டேபிள் ஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 8


 

செய்முறை:- நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுக்கவும். காரட்டைத் தோலுரித்து ஸ்லைசுகளாக நறுக்கிக் குக்கரில் வேக விடவும். ஆறியதும் அரைத்துக் கொதிக்கும் பாலில் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து ஜீனி சேர்த்துக் கரைந்ததும் மில்க்மெய்ட் சேர்த்து இறக்கவும். வறுத்த முந்திரி தூவி குளிர்வித்துப் பரிமாறவும்.

 

புதன், 12 அக்டோபர், 2022

19. மாவடு இஞ்சி மண்டி

19. மாவடு இஞ்சி மண்டி.


 

தேவையானவை:- மாவடு இஞ்சி - 100 கிராம், சி. வெங்காயம் - 15, வெள்ளைப்பூண்டு - 15, பச்சை மிளகாய் - 6, திக்கான அரிசி களைந்த தண்ணீர் - 2 கப், புளி - நெல்லி அளவு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து . வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம்- ஒரு துண்டு. கருவேப்பிலை -  1 இணுக்கு.


 

செய்முறை:- மாவடு இஞ்சியைத் தோல் சீவி நைசாக அரிந்து வைக்கவும். வெங்காயம் பூண்டு பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும். அரிசி களைந்த தண்ணீரில் உப்புப் புளியைப் போட்டுக் கரைத்துச் சாறெடுத்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து வெந்தயம் பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், மாவடு இஞ்சி போட்டு லேசாக வதக்கவும். இதில் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். அரிசி களைந்த தண்ணீர் திக்காக இல்லை என்றால் ஒரு டீஸ்பூன் பச்சரிசி, ஒரு துண்டு பெருங்காயம், கால் டீஸ்பூன் வெந்தயத்தைப் பொடித்துப் போடவும். மண்டி சுண்டியதும் இறக்கவும். இது தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

திங்கள், 10 அக்டோபர், 2022

18. பச்சை மஞ்சள் குழம்பு

18. பச்சை மஞ்சள் குழம்பு.


 

தேவையானவை:- பச்சை மஞ்சள் கிழங்கு – 10, பெரிய வெங்காயம் – 1, பூண்டு - 8 பல், தக்காளி – 2, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு உளுந்து சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், மல்லித்தழை – 2 டீஸ்பூன்.  


 

செய்முறை:- பச்சை மஞ்சளைத் தோலுரித்துத் துண்டுகளாக்கவும். பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளியையும் பொடியாக அரிந்து கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து சீரகம் தாளிக்கவும். இதில் வெங்காயம், பூண்டு தக்காளி போட்டு வதக்கி உப்பு சாம்பார் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து நன்கு குழைந்ததும் இரண்டு கப் நீரூற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும்போது மஞ்சளைச் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேகவைத்து மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...