16. ஆரோ ரூட் கஞ்சி..
தேவையானவை:- ஆரோரூட் மாவு – 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர்- 2 டம்ளர், மோர் – அரை கப், சீரகத்தூள் அல்லது ஓமத்தூள் – கால்டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை:-ஆரோரூட் மாவில் வெதுவெதுப்பான நீரைக் கலந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். கொதித்துக் கண்ணாடி போல் திக்காக ஆனவுடன் சீரகத்தூள் அல்லது ஓமத்தூள் சேர்க்கவும். மிளகுத்தூளும், உப்பும் சேர்த்துக் கலந்து நன்கு ஆறவிடவும். ஆறியதும் மோர் ஊற்றிக் கரைத்துப் பகல் நேரத்தில் அருந்தவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!