10.நார்த்தை ஸ்வீட் பச்சடி
தேவையானவை:- நார்த்தங்காய் – 2, பச்சைமிளகாய் 4, வெல்லம் – 1 அச்சு, உப்பு – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:- நார்த்தங்காயைக் கழுவித் துடைத்துத் துண்டுகளாக்கவும். எண்ணெயில் கடுகு, உளுந்து கருவேப்பிலை, வரமிளகாய் கிள்ளிப் போட்டுத் தாளித்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், நார்த்தங்காயைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். வெல்லத்தைத் தூள் செய்து சேர்த்துக் கரைந்ததும் இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக