எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
எலுமிச்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எலுமிச்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

POTATO LEMON MASALA . உருளை எலுமிச்சை மசாலா

POTATO LEMON MASALA:-

NEEDED:-
POTATO - 2 NOS. BOILED PEELED & SMASHED.
BIG ONION - 1 NO. CHOPPED FINELY.
GREEN/RED CHILLIES - 3 NOS. CUT INTO 1 INCH PIECES
GINGER - 1 INCH PIECE ,CHOPPED
TURMERICPOWDER - 1 PINCH
LEMON JUICE - 1/2 TBLSPN
SALT - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
CHANNA DHAL - 1 TSP
ANISEED - 1 TSP
BAY LEAF - 1

METHOD:-

HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL, WHEN IT BECOMES BROWN ADD CHANNA DHAL, ANISEEDS & BAY LEAF. THEN ADD GREEN CHILLIES, CURRY LEAVES, ONION, SAUTE FOR 2 MINUTES. ADD THE SMASHED POTATO WITH SALT, TURMERIC POWDER AND LEMON JUICE.POUR HALF CUP WATTER. COOK FOR 5 MINUTES AND SERVE HOT WITH CHAPPATHIS, NAANS, FULKAS.

உருளை எலுமிச்சை மசாலா:-

தேவையானவை:-
உருளைக்கிழங்கு - 2 வேகவைத்துத் தோலுரித்து மசிக்கவும்.
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
பச்சை/சிகப்பு மிளகாய் - 3, 1 இன்ச் துண்டாக நறுக்கவும்.
இஞ்சி - 1 இன்ச் துண்டு. பொடியாக நறுக்கவும்.
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை.
எலுமிச்சை ரசம் - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை இலை - 1

செய்முறை:- பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். அது வெடித்தவுடன் உளுந்து போட்டு சிவந்தவுடன் கடலைப்பருப்பு, சோம்பு பட்டை இலை போடவும். இஞ்சி, கருவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். அதில் மசித்த உருளைக்கிழங்கைப் போட்டு . மஞ்சள் தூளும் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்க்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் வேகவைத்து சப்பாத்தி, நான், புல்காவோடு பரிமாறவும்.

சனி, 6 அக்டோபர், 2012

NEEM FLOWER LEMON RASAM .வேப்பம்பூ எலுமிச்சை ரசம்.

NEEM FLOWER LEMON RASAM.

NEEDED:-
NEEM FLOWER DRIED - 1 HANDFUL
TAMARIND - 3 PODS
SALT - 1 TSP
LEMON JUICE - 1 TBLSPN
JEERA PEPPER POWDER - 1 TSP
TURMERIC POWDER - 1 PINCH
RED CHILLY - 1 NO HALVED
OIL/GHEE  - 2 TSP
MUSTARD - 1 TSP
JEERA - 1/2 TSP
FENUGREEK - 1/3 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH

METHOD:-
 SOAK TAMARIND AND SALT IN 2 CUPS OF WATER AND SQUEEZE THE JUICE OUT. ADD JEERA PEPPER POWDER,TURMERIC POWDER AND KEEP ASIDE . HEAT OIL IN A PAN ADD MUSTARD WHEN IT SPLUTTERS ADD JEERA, FENUGREEK,ASAFOETIDA POWDER AND HALVED CHILLY. ADD DRIED NEEM FLOWER AND SAUTE FOR A MINUTE.POUR THE TAMARIND JUICE IN IT AND BRING TO BOIL. AT THE TIME OF BOILING REMOVE FROM FIRE AND ADD LEMON JUICE. SERVE HOT WITH RICE AND PAPPDS.

வேப்பம்பூ எலுமிச்சை ரசம்.
தேவையானவை:-
வேப்பம்பூ காயவைத்தது - 1 கைப்பிடி
புளி - 2 சுளை
உப்பு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை ரசம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை.
வர மிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளவும்.
எண்ணெய்/நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/3 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:-
புளியை உப்புடன் இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும். அதில் மிளகு சீரகப் பொடி,மஞ்சள் பொடி சேர்க்கவும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். அது வெடித்ததும் சீரகம், வெந்தயம், பெருங்காயம் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் போடவும். காய்ந்த வேப்பம் பூக்களைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். அதில் புளிக்கரைசலை விட்டு கொதிக்க விடவும். கொதி வரும் சமயம் இறக்கி எலுமிச்சை ரசத்தை சேர்த்து சூடான சாதம் அப்பளத்தோடு பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...