கோகுலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோகுலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 19 ஜனவரி, 2017
வெள்ளி, 4 நவம்பர், 2016
வெஜிடபிள் ஆம்லெட்:- ( அடை ). கோகுலம், GOKULAM, KIDS RECIPES.
தேவையானவை :-
பொட்டுக்கடலை
மாவு – அரை கப், கடலை மாவு – அரை கப், கார்ன்ஃப்ளோர் – ஒரு டீஸ்பூன், பால்
– ஒரு கப், துருவிய காய்கறிக் கலவை – ஒரு கப்,
( காரட், பீன்ஸ், முட்டைக் கோஸ், நூல்கோல், பீட்ரூட்,) பச்சை மிளகாய் – 1,
பெரிய வெங்காயம்
– 1, கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன், வரமிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்,
கரம் மசாலா
தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை டீஸ்பூன், மிளகு சீரகத்
தூள் – அரை
டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் –
20 மிலி.
செய்முறை:-
பொட்டுக் கடலை மாவு, கடலை மாவு, மைதா கார்ன் ஃப்ளோர், உப்பு
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மிளகு சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்,
பொடியாகத் துருவிய காய்கறிகள், பெரிய வெங்காயம் கொத்துமல்லித்தழை போட்டு நன்கு கலக்கவும்.
இதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி அடிக்கவும். பால் தேவைப்பட்டால் இன்னும் சிறிது சேர்த்து
தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் தடவி ஆம்லெட்டுகளாக
சுட்டு திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு வேகவைத்து தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.
வெஜிடபிள்
ஆம்லெட் நல்ல நார்ச்சத்து மிகுந்த உணவாகும். காய்கறிகள் மற்றும் பொட்டுக்
கடலையின் சத்துகள் முழுமையா கிடைக்குது. எளிதில் ஜீரணமாகக் கூடியது.
பொட்டுக் கடலையில் இரும்புச் சத்து, லைசீன், ஐசோலூசின், ட்ரிப்ஃபோபேன்,
மற்றும் அரோமேட்டிக் அமினோ அமிலம் ஆகிய அமினோ அமிலங்கள், முழுமையான
புரதங்கள் இருக்குது. கடலைப் பருப்பு ஞாபகசக்திக்கு உதவுது. இஞ்சி பூண்டு
சீரகம் மிளகுத்தூள் செரிமானத்துக்கு உதவுது. பசியைத் தூண்டுது.
பொட்டுக்
கடலையிலும் கடலைப் பருப்பிலும் காய்கறிகளிலும் இருக்கும் நார்ச்சத்து
செரிமானப் பிரச்சனைகளைத் தீர்க்குது. துத்தநாகம், ஃபோலேட், கால்சியம்,
புரதச்சத்துகள் நிரம்பியது . எளிதில் கரையக்கூடிய கொழுப்பு சிறிய அளவில்
இருக்குது.
70%
கலோரீஸ் பொட்டுக் கடலையில் இருந்து கிடைக்குது. இதில் சோடியம்,
ப்ரோட்டீன், ஃபேட் சிறிய அளவில் இருக்கின்றன. கார்போஹைட்ரேட் 27 சதம்
இருக்கு. இதில் கரையாத கொழுப்பு, இனிப்பு, கொலஸ்ட்ரால் எதுவுமே இல்லை.
உடல்
ஊட்டத்துக்கும் வளர்ச்சிக்கும் பொட்டுக் கடலையும் கடலைப்பருப்பும்
உதவுகின்றன. விட்டமின், மினரல், தாது உப்புகள், கனிமச் சத்துகள்
காய்கறிகள், கொத்துமல்லித்தழை மூலம் கிடைக்குது. பாலில் விட்டமின் பி
இருக்கு. கால்சியம் இருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும்
உதவுது.கண்பார்வையைத் தெளிவாக்குது.
அவ்வப்போது இந்த வெஜிடபிள் ஆம்லெட் / அடையைச் செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டம் கிடைக்கும்.
பர்ப்பிள்
கலர் கேபேஜ் சாலட்டை பாராட்டியதற்கு நன்றி ஆர்.ஜே. ஹரிராஜ், ஆர். ஏ.
விஜயபாலா,ஆர். ஜி காயத்ரி, ஆர். ஜே ஜெய்ஹரிதா, செல்வமருதூர். !!!
Labels:
அடை,
ஆம்லெட்,
குழந்தை உணவு,
கோகுலம்,
GOKULAM,
KIDS RECIPES,
VEGETABLE OMLETTE
செவ்வாய், 4 அக்டோபர், 2016
பர்ப்பிள் கேபேஜ் சாலட் :- PURPLE CABBAGE SALAD.
பர்ப்பிள் கேபேஜ் சாலட் :-
தேவையானவை :-
வயலட் கேபேஜ் – 250 கிராம், நீளமாக நறுக்கவும். பச்சை அவரை
– ஒரு கப், சிவப்புக் குடைமிளகாய் – சின்னம் ஒன்று நீளமாக விதையில்லாமல் நறுக்கவும்.
பைனாப்பிள் – கால் பாகம் சதுரத் துண்டுகள் செய்யவும், கிஸ்மிஸ் – கால் கப், வறுத்த
பாதாம் – கால் கப், புதினா இலை – ஒரு கைப்பிடி, எலுமிச்சை சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்,
தேன் – 2 டேபிள் ஸ்பூன், சில்லி கார்லிக் சாஸ் – கால் டீஸ்பூன், தக்காளி – கெச்சப்
– 1 டேபிள் ஸ்பூன்.
Labels:
கோகுலம்,
பர்ப்பிள் கேபேஜ் சாலட்,
GOKULAM,
PURPLE CABBAGE SALAD
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016
ஃபலாஃபல்:- ( காபூலி சன்னா - கொண்டைக்கடலை வடை ).FALAFEL.
தேவையானவை :-
கொண்டைக்கடலை – 2 கப், மைதா – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம்
– 1 பொடியாக அரியவும். கொத்துமல்லித்தழை – கால் கப், வெள்ளை எள் – 1 டேபிள் ஸ்பூன்
, சீரகம், 1 டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு
– 5 பல், ஏலப்பொடி – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான
அளவு.
செய்முறை:-
வெள்ளைக் கொண்டைக் கடலையைக் கழுவி 12 மணி நேரம் ஊறவைக்கவும்.
நீரை வடித்து மிக்ஸியில் கொண்டைக் கடலை, மைதா, பெரிய வெங்காயம், கொத்துமல்லித் தழை,
சீரகம், மிளகு, பூண்டு, மிளகாய்த்தூள், ஏலப்பொடி, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும்.
வடைகளாகத் தட்டி வெள்ளை எள்ளில் புரட்டி வைத்து எண்ணெயைக் காயவைத்துப் பொன்னிறமாகப்
பொரிக்கவும். மயோனிஸுடன் பரிமாறவும்.
Labels:
ஃபலாஃபல்,
குழந்தை உணவு,
கோகுலம்,
FALAFEL,
GOKULAM,
KIDS RECIPES
வெள்ளி, 3 ஜூன், 2016
ப்ராகோலி சாப்பீஸ் :- கோகுலம், GOKULAM KIDS RECIPES.
ப்ராகோலி சாப்பீஸ் :-

தேவையானவை :-
ப்ராக்கோலி – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – ½ டீஸ்பூன்,
மைதாமாவு , கடலை மாவு, சோளமாவு – தலா ஒரு டேபிள் ஸ்பூன்., உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய்
– பொறிக்கத் தேவையான அளவு.
செய்முறை:-
ப்ராக்கோலியைப் பூக்களாகப் பிரித்து உப்பு கலந்து வெந்நீரில் போட்டு சுத்தம்
செய்து கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகாய்ப்பொடி போட்டு நன்கு பிசறி லேசாகத்
தண்ணீர் தெளித்து ஒரு பானில் போட்டு மூடி வைத்து சிம்மில் 5 நிமிடம் வேகவிடவும். தண்டுப்
பாகம் ஓரளவு வெந்திருந்தால் எடுத்துவிடலாம். இல்லாவிட்டால் இன்னும் சிறிது நீர் தெளித்து
தண்டுப்பாகம் அடிப்பக்கம் இருக்குமாறு வேகவிடவும்.
மைதாமாவு, கடலை மாவு, சோளமாவை உப்பு மிளகாய்ப் பொடி சேர்த்துக் கரைத்து வைக்கவும்.
இதில் வேகவைத்த ப்ராக்கோலிப் பூக்களை நனைத்தெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ப்ராகோலீஸ் சாப்பீஸை
சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
ப்ராக்கோலியில்
உள்ள ஃபோலிக் அமிலம் பார்வைத் திறனை அதிகரிக்கும். காய்கறி வகை என்பதால்
வயிறை நிரப்பும் என்பதோடு எடையும் கூடாது. நார்ச்சத்து நிரம்பியது. எளிதில்
ஜீரணமாகும்.
100
கிராம் ப்ராகோலியில் தினப்படித் தேவையான அளவு விட்டமின் கே யும் விட்டமின்
சி யும் விட்டமின் பி யும் மாங்கனீசும் கிடைக்கிறது.இதில் கார்போஹைட்ரேட்,
புரதம், கொழுப்புச் சத்து குறைவான அளவில் உள்ளது.
இதில்
உள்ள சல்ஃபோ ப்ரொஃபைன் பொரித்தாலோ அவித்தாலோ வறுத்தாலோ மைக்ரோ வேவ்
அடுப்பில் சமைத்தாலோ குறைவதில்லை. இதில் லூட்டீன் மற்றும் சியாக்ஸதீன் ஆகிய
கார்டினாய்டுகள் உள்ளன. இவை குடலில் உருவாகும் பலவித புற்றுநோய்களையும்
தடுக்கின்றன..
கார்ட்டினாய்டு ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்படுவதால் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உருவாக்குது. ப்ராக்கோலியைக் குழந்தைகளுக்கு அவ்வப்போது கொடுத்து வருவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
டிஸ்கி:- கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்பைப் பாராட்டிய நெய்வேலி வாசகி எஸ். கே. ஸ்ரீவித்யா அவர்களுக்கு நன்றிகள். :)

Labels:
குழந்தைகள் உணவு,
கோகுலம்,
GOKULAM,
KIDS SPECIAL RECIPES
வியாழன், 2 ஜூன், 2016
கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப். - கோகுலம் GOKULAM KIDS RECIPES.
தேவையானவை:-
(ஒரு கட்டு கருவேப்பிலை, ஒரு கட்டு புதினா, ஒரு கட்டு கொத்துமல்லியில்) ஆய்ந்த தளிர் இலைகள் மட்டும். – தலா ஒரு பெரிய கைப்பிடி. அளவு எடுத்து அலசி வைக்கவும், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சைமிளகாய் – 1 , வேகவைத்த துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், பட்டை – 1, இலை – 1, கல்பாசிப்பூ -1, சோம்பு -1/2 டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – ½ டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், பால் – 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
செய்முறை:-
பெரிய வெங்காயம் தக்காளியை நீளமாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு சீரகம் மிளகு, பட்டை, இலை, கல்பாசிப்பூ தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆய்ந்து கழுவிய தளிர் இலைகள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள் உப்பு வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும்.ஆறியதும் திறந்து பச்சை மிளகாயை எடுத்துப் போட்டு விட்டு நன்கு மசித்து அந்தச் சாறை வடிகட்டி எடுக்கவும். திரும்ப ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு மசித்து வடிகட்டவும். பருப்பும் வெங்காயமும் தக்காளியும் கரைந்து வரும்வரை இன்னும் அரை கப் தண்ணீர் கூட ஊற்றி வடிகட்டி எடுக்கலாம். வடிகட்டிய இரண்டரை கப் சூப்பில் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். இறக்கி பாலும் மிளகுத்தூளும் கலந்து குடிக்கக் கொடுக்கவும்.
ரொம்ப எனர்ஜி தரும் வாசனையான சூப் இது. அசதி போக்கும்.
தூக்கம் போக்கி சுறுசுறுப்பை அளிக்கும். பசியைத் தூண்டும். வயிறு மந்தம்,
கண் பார்வை குறைபாடு ஆகியன போக்கும். கொழுப்புச் சத்தைக் கரைக்கும்.
சூப்பாக வேகவைத்துக் குடிப்பதால் கீரைகளின் உடனடிப் பயன் அப்படியே
சிதைவுறாமல் கிடைக்கும். நீர்ச்சத்து அடங்கி உள்ளதால் தாகவிடாயைத்
தீர்க்கும்.
கருவேப்பிலை
கொத்துமல்லி புதினா இலைகளில் அதிக அளவு இரும்புச் சத்து
உள்ளது.அனீமியாவைப் போக்குகிறது. இதயம், ஈரல், செரிமானம், முடி வளர்ச்சி
ஆகியவற்றுக்கு உதவுகின்றது. பரிட்சைக்குப் படிக்கும் குழந்தைகளுக்கான
எனர்ஜி சூப் என்றும் சொல்லலாம்.
கருவேப்பிலையில்
விட்டமின் ஏ உள்ளது. 1 சதம் கொழுப்புச் சத்தும், 6.1 சதம் புரதம், 4 சதம்
தாது உப்பும், நார்ச்சத்துகளும் மாவுச்சத்துகளும் , மக்னீசியம், இரும்பு,
சுண்ணாம்பு, தாமிரம், கந்தகம், க்ளோரின், ஆக்ஸாலிக் ஆசிட் ஆகியனவும் உள்ளன.
சிலண்ட்ரோ,
சைனீஸ் பார்ஸ்லி என்றழைக்கப்படும் கொத்துமல்லியில் விட்டமின் ஏ, கே
மற்றும் கால்சியம் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகின்றது. ஒமேகா - 6
ஃபாட்டி ஆசிட் சிறிய அளவில் இருக்கிறது.
விட்டமின்
ஏ ,சி, ஃபோலேட், கால்சியம் பொட்டாசியம் மக்னீசியம் அதிக அளவிலும் ஒமேகா 3
, 6 ஃபாட்டி ஆசிட்டுகள் சிறிய அளவிலும் காணப்படுகின்றன.
குழந்தைகளே சூப்பைக் குடிங்க. சூப்பராப் படிங்க. !
டிஸ்கி :- பரிட்சை ஒண்ணும் பூதம் இல்லை என்ற கவிதைக்கு வாசகர் கடிதம். ! நன்றி தேஜஸ்வி & கோகுலம். :)

Labels:
குழந்தைகள் உணவு,
கோகுலம்,
GOKULAM,
KIDS SPECIAL RECIPES
புதன், 4 மே, 2016
ஹோல் வீட் ப்ரெட் பனீர் பேபிகார்ன் சாண்ட்விச். கோகுலம். GOKULAM KIDS RECIPES.
ஹோல் வீட் ப்ரெட் பனீர் பேபிகார்ன் சாண்ட்விச். கோகுலம். GOKULAM KIDS RECIPES.
தேவையானவை :- வீட் ப்ரெட் 12 ஸ்லைஸ், ப்ரெஷ் பனீர் - ஒரு பாக்கெட்,
பேபிகார்ன் - 10, அமுல் பட்டர் - ஒரு டேபிள் ஸ்பூன், அமுல் சீஸ் ஸ்ப்ரெட் -
ஒரு டேபிள் ஸ்பூன் , துருவிய கோஸ் - 1 டேபிள் ஸ்பூன் ,தக்காளி கெச்சப் - 2
டேபிள் ஸ்பூன் , மல்லித் தழை - ஒரு கைப்பிடி, மிளகுத் தூள் - கால்
டீஸ்பூன். நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:-
பனீரை பொடித் துண்டுகள் செய்து நெய்யில் லேசாக வறுத்து வைக்கவும்.
பேபிகார்னை வட்டத் துண்டுகள் செய்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும். வீட்
ப்ரெட்டை டோஸ்டரில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து வைக்கவும்.
ப்ரெட்டில் ஒரு பக்கம் பட்டரை தடவி முட்டைக்கோசையும் கொத்துமல்லித்
தழையையும் மிளகுத்தூளையும் தூவவும். அதன் மேல் இன்னொரு ப்ரெட் வைத்து
சீஸ் ஸ்ப்ரெட் தடவி பனீரையும் பேபிகார்னையும் பதிக்கவும். அதன் மேல்
இன்னொரு ப்ரெட் வைத்து மூடி தக்காளி கெட்சப்பால் இரு கண்கள் குட்டி வாய்
கொண்ட ஸ்மைலி வரைந்து குழந்தைகளுக்கு மாலை உணவாகப் பரிமாறவும்.
முழு கோதுமையில் செய்யப்படும் வீட் ப்ரெடில் கோதுமையின் முழுப் பயன்களும்
அடங்கி உள்ளது. ஜீரணத்துக்குத் தேவையான நார்ச்சத்து அதிகம் உள்ளது.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான புரதமும், மூளைக்கு தேவையான கார்போ
ஹைட்ரேட்டும் அடங்கி உள்ளது. முழு கோதுமை ப்ரெட் தவிட்டோடு இருப்பதால்
செரிமானம் எளிதாகிறது. ஒரு ஸ்லைஸ் ஹோல் வீட் ப்ரெடில் 2.8 கிராம் நார்சத்து
அடங்கியுள்ளது. இதயநோய் தாக்கும் அபாயம் குறைகிறது. வெயிட் அதிகம் போடாது.
மூளை வளர்ச்சிக்குத் தேவையான விட்டமின் பி, விட்டமின் ஈ, மக்னீசியம்,
பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் ஆகியன அடங்கி உள்ளது.
பனீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியமும்
பாஸ்பரஸும் விட்டமின், மினரல், மற்றும் புரதங்களும் அடங்கியுள்ளன. ஒமேகா 3
பாட்டி ஆசிட் அடங்கி உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்துகள்
அடங்கியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குது. உடல் எடையைக் கட்டுக்குள்
வைக்கின்றது.
பேபிகார்னில் மிக அதிக அளவு போலேட் இருக்கின்றது. போலிக் ஆசிட், தையமின்,
ரிபோ ஃபிளேவின், நியாசின் ஆகியன அடங்கி உள்ளன. நார்ச்சத்து அதிகம்
இருப்பதால் செரிமானம் எளிதாகிறது. அமினோ ஆசிடை உருவாக்குவதன் மூலம்
வளர்சிதை மாற்றத்துக்கும் ரத்தத்தில் சிவப்பணு உற்பத்திக்கும்
வழிகோலுகிறது.
அமுல் பட்டரும் சீஸ் ஸ்ப்ரெடும் நெய்யும் உடலுக்குத் தேவையான கொழுப்பு
சத்தையும் எனர்ஜியையும் வழங்குகின்றன . கொத்துமல்லித் தழை
செரிமானத்துக்கும் மிளகுத் தூள் பசியைத் தூண்டவும் பயன்படுகின்றன. தக்காளி
கெட்சப் உணவின் ருசிக்காகவும் ரத்த விருத்திக்கும் பயன்படுகிறது.
டிஸ்கி :- 2016 மார்ச் மாத கோகுலத்தில் வெளியானது.

Labels:
குழந்தைகள் உணவு,
கோகுலம்,
GOKULAM,
KIDS SPECIAL RECIPES
உளுந்தமாவு அச்சு உருண்டை :- ( பின்னி ) - கோகுலம் GOKULAM KIDS RECIPES.
உளுந்தமாவு அச்சு உருண்டை :- ( பின்னி ) - கோகுலம் GOKULAM KIDS RECIPES.
தேவையானவை :-
வெள்ளை உருண்டை உளுந்து - 2 கப், வெள்ளை ரவை - கால் கப், கோதுமை மாவு - 2
டேபிள் ஸ்பூன், மாவா ( இனிப்பில்லாத கோவா ) - ஒன்றரை கப், நெய் -
ஒன்றரைகப், பால் - அரை கப், சீனி - 2 கப் , பால் - 2 டேபிள் ஸ்பூன் (
கடைசியில் சேர்த்துப் பிசைந்து அச்சு உருண்டை செய்ய ) ,ஊறவைத்துத்
தோலுரித்து குச்சியாகப் பொடித்த பாதாம் - கால் கப். சூர்யகாந்தி விதைகள் - 2
டேபிள் ஸ்பூன். உடைத்த பிஸ்தா - 1 டீஸ்பூன். ஏலப் பொடி - அரை டீஸ்பூன்.
செய்முறை :-
வெள்ளை உருண்டை உளுந்தைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். சிறிது சிறிதாக
அரை கப் பால் சேர்த்து நைஸாக அரைக்கவும். ஒரு பானில் பாதி நெய்யைக்
காயவைத்து ரவையையும் அதன் பின் கோதுமை மாவையும் போட்டு பொன்னிறமாக ஆகும்வரை
நிதானமான தீயில் வறுக்கவும்.
இதில் மாவாவைப் போட்டு லேசாகச் சிவந்து வரும்வரை கிளறவும். இதில் அரைத்த
உளுந்து விழுதையும் போட்டுக் கிளறவும். நிதானமான தீயில் 30 நிமிடம்
கிளறியதும் மாவு உருண்டு வரும்போது மிச்ச நெய்யைச் சேர்க்கவும். தொடர்ந்து
கிளற மாவு பொன்னிறமாக உதிர்ந்து நன்கு வாசனை வரத் தொடங்கும். அதில்
ஏலப்பொடியையும் சீனியையும் சேர்த்துக் கிளறவும்.
குச்சியாக நறுக்கிய பாதாமையும் 2 டேபிள் ஸ்பூன் பாலையும் கலந்து நன்கு
பிசையவும். இதை சமமாகத் தட்டி வட்ட வட்டமான அச்சுகளினால் வெட்டி எடுத்து
மேலே சூரிய காந்தி விதைகளையும் பொடித்த பிஸ்தாவும் தூவி பரிமாறவும்.
இதில் அடங்கியுள்ள சத்துகள். & பயன்கள்.
குளிர்காலத்துக்கு ஏற்ற இனிப்பு. பண்டிகைப் பலகாரமும் கூட. ஆண் பெண் என இரு
குழந்தைகளுக்கும் ஏற்ற சத்தான உணவு. உளுந்தை களியாகச் செய்வதை விட இப்படி
இனிப்பாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். உளுந்து
நார்ச்சத்து நிறைந்தது எளிதில் ஜீரணமாகும். உடலில் இருக்கும் எலும்புகளை
உளுத்துப் போகாமல் காப்பாற்றுவதால்தான் இதற்கு உளுந்து என்று பெயர்.
இடுப்பு எலும்பை பலப்படுத்துகிறது. நினைவுத்திறனை அதிகரிக்கும். மெலிந்த குழந்தைகளின் சதை வளர்ச்சிக்கு ஏற்றது. ஆண் குழந்தைகளுக்கு பதின் பருவங்களில் உண்டாகும் எலும்பு வளர்ச்சிக்கும் பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு இடுப்பெலும்பை பலப்படுத்து பின்னாளில் குழந்தைப்பேறு காலங்களில் இடுப்பெலும்பு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கும். இதில் போடும் பாதாம் பிஸ்தா சூரியகாந்தி விதைகள் ப்ரோடீன் சந்து நிறைந்தவை.
இடுப்பு எலும்பை பலப்படுத்துகிறது. நினைவுத்திறனை அதிகரிக்கும். மெலிந்த குழந்தைகளின் சதை வளர்ச்சிக்கு ஏற்றது. ஆண் குழந்தைகளுக்கு பதின் பருவங்களில் உண்டாகும் எலும்பு வளர்ச்சிக்கும் பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு இடுப்பெலும்பை பலப்படுத்து பின்னாளில் குழந்தைப்பேறு காலங்களில் இடுப்பெலும்பு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கும். இதில் போடும் பாதாம் பிஸ்தா சூரியகாந்தி விதைகள் ப்ரோடீன் சந்து நிறைந்தவை.
இதில் சேர்க்கும் உளுந்தில் விட்டமின் பி அதிக அளவில் இருக்கிறது. இதில்
ப்ரோட்டீன் , கார்போ ஹைட்ரேட் ( மாவுச் சத்து ) சுண்ணாம்புச் சத்து
பாஸ்பரஸ் , நிரம்பியது. அதிலும் ப்ரோட்டீனும் விட்டமின் பியும் அதிக அளவில்
இருப்பதால் எக்ஸர்சைஸ் செய்யும் குழந்தைகள் அதிகம் ஓடி ஆடி விளையாடும்
குழந்தைப் பருவத்தினருக்கு இழந்த சத்துக்களை ஈடு செய்யும் மேலும் விட்டமின்
பி உடலில் ரத்த சோகையைப் போக்கும். ஃபோலிக் ஆசிட் குறைபாட்டை நீக்கும்.
உளுந்து உணவைச் சாப்பிடுவதால் இது கொழுப்புச் சத்தைக் குறைத்து இரத்த
ஓட்டத்தை இதமாக்கி இதயத்துக்கும் பலமளிக்கிறது.
100 கி உளுந்தில் 350 கலோரீஸ் கிடைக்கிறது. 1.5 கிராம் கொழுப்புச் சத்தும்,
60 கிராம் கார்போஹைட்ரேட்டும், 24 கிராம் ப்ரோட்டீனும் கிடைக்கிறது.
கோதுமையில் 100 கிராமில் 346 கலோரிகள் கிடைக்குது. இன்னும் ப்ரோட்டீன் 11.8
கிராம், கொழுப்பு 1.5 கிராம், தாதுக்கள் - 1.5 கிராம், நார்ச்சத்து 1.2
கிராம், மாவுச்சத்து 71.2 கிராம் , கால்சியம் - 41 மி. கி , பாஸ்பரஸ் - 306
மிகி, இரும்புச் சத்து 5.3 மிகி, ஜெட்ரோமின்41 - மைக்ரோகிராம், தயாமின் -
0.45 மி.கி., ரிபோஃப்ளோவின் - 0.17 மி.கி., நயாசின் - 5.5 மி.கி., ஃபோலிக்
ஆசிட் - 142 மைக்ரோ கிராம் அளவு உள்ளது.மேலும் அமினோ அமிலங்களும் தாது
உப்புகளும் இருக்கு.
சீனியை அளவோடு உபயோகப்படுத்துவதால் அது எனர்ஜியை கொடுக்குது. பாதாமில் நல்ல
கொழுப்பு இருப்பதால் அது உடலுக்கு ஏற்றது. இதிலும் மாவுச்சத்து - 0 .24
கி, கொழுப்பு - 0.61 கி, ப்ரோடீன் - 0.26 கி கிடைக்குது. சூரிய காந்தி
விதைகளில் ப்ரோட்டீன் 1.5 கி, கால்சியம் 5.6 மி கி, பொட்டாசியம் 68 மிகி
இருக்கு.மாவாவுல சோடியம் பொட்டாசியம் கார்போ ஹைட்ரேட் மட்டுமில்ல.
விட்டமின் ஏ, பி 12, பி 6, விட்டமின் சி, டி, இ, கால்சியம், காப்பர்,
ஃபோலேட், அயன் , மெக்னீஷியம், மாங்கனீஸ், நியாசின், பேண்டோதெனிக் அமிலம்,
பாஸ்பரஸ், ரிபோஃப்ளேவின் , செலினியம், தையமின் , சின்க் எல்லாமே இருக்கு.
நெய்யிலேருந்து உடல் இயக்கத்துக்குத் தேவையான கொழுப்புச் சத்து கிடைக்குது.
எனவே சத்துகள் நிரம்பிய உளுந்த மாவு உருண்டையை குழந்தைகள் விரும்பும்
வண்ணம் சுவையாகச் செய்து கொடுத்து இந்த தீபாவளிக்கு அவர்கள் உடல்நலமும்
மனநலமும் காப்போம்.டிஸ்கி :-இந்த உணவுக் குறிப்பு ஃபிப்ரவரி 2016 கோகுலத்தில் வெளியானது.
Labels:
குழந்தைகள் உணவு,
கோகுலம்,
பின்னி,
GOKULAM,
KIDS SPECIAL RECIPES
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















