புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

AUBERGINE KOSAMALLI. கத்திரிக்காய் கோசமல்லி

AUBERGINE KOSAMALLI:-

NEEDED:-
AUBERGINE - 250 GMS
POTATO - 1 NO BOILED ( OPTIONAL)
BIG ONION - 1 N0. CHOPPED
TOMATO - 1 NO. CHOPPED
GREEN CHILLIES - 6 NOS. SLIT OPEN
CURRY LEAVES - 1 ARK
TAMARIND - 1/2 LEMON SIZE
SALT - 1 TSP OIL - 3 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH

METHOD:-

WASH AND CUT AUBERGINES.PRESSURE COOK WITH ENOUGH WATER. AFTER COOLING REMOVE SKIN AND SMASH IT. SMASH THE POTATO TOO.SOAK TAMARIND IN 3 CUPS OF WATER AND SQUEEZE THE PULP OUT IT. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD ASAFOETIDA POWDER. THEN ADD GREEN CHILLIES, ONION, TOMATO AND SAUTE WELL. POUR THE TAMARIND WATER WITH SALT. ADD THE SMASHED AUBERGINE AND POTATO. BRING TO BOIL AND SIMMER FOR 5 MINUTES SERVE HOT WITH IDDLIES AND DOSAS AND THALICHA IDYAPPAMS.

 NOTE:- BIG AUBERGINES CAN BE BARBACUED AND USED INSTEAD OF PRESSURE COOKING.

கத்திரிக்காய் கோசமல்லி:-

தேவையானவை:-
கத்திரிக்காய் - 250 கி
உருளைக்கிழங்கு - 1 வேகவைத்தது ( விரும்பினால்)
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்
தக்காளி - 1 பொடியாக அரியவும்.
பச்சை மிளகாய் - 6 இரண்டாக வகிரவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு
புளி - 1/2 எலுமிச்சை அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை:-
கத்திரிக்காய்களைக் கழுவி நான்காக நறுக்கவும். பிரஷர் குக்கரில் போதுமான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும் தோலுரித்து மசிக்கவும். உருளைக்கிழங்கையும் மசிக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் உளுந்தைப் போட்டு சிவந்ததும் பெருங்காயப் பொடியைப் போடவும். பின் பச்சை மிளகாய், பெரியவெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அதில் புளித்தண்ணீரை உப்புடன் சேர்க்கவும். மசித்த கத்திரிக்காயையும், உருளையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். 5 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பிலிருந்து இறக்கி சூடாக இட்லி, தோசை, தாளிச்ச இடியாப்பத்துடன் பரிமாறவும்.

 குறிப்பு:- பிரஷர் குக்கரில் வேகவைப்பதற்குப் பதிலாக பெரிய கத்திரிக்காய்களை முழுதாக சுட்டும் பயன்படுத்தலாம்.

4 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...