அவல் வெல்லக் கொழுக்கட்டை
தேவையானவை :- பச்சரிசி மாவு – 2 கப், பேப்பர் அவல் – அரை கப் , துருவிய தேங்காய் – அரை கப், தூள் வெல்லம் – அரை கப், ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன். வெந்நீர் – ஒண்ணேகால் கப்.
செய்முறை:- அவலைப் பொடித்து துருவிய தேங்காய் வெல்லம் ஏலப்பொடி சேர்த்து நன்கு பிசைந்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். கொதிக்கும் வெந்நீரில் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து மாவைக் கொட்டிக் கிளறி மூடி வைக்கவும். ஆறியதும் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்துக் கிண்ணம் போல் செய்து அதில் அவல் பூரணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக