கேப்பை புட்டுக் கொழுக்கட்டை
தேவையானவை :- கேப்பை – 2 கப், தேங்காய்த் துருவல் – அரை கப், தூள் வெல்லம் – அரை கப், ஏலப்பொடி – ஒரு சிட்டிகை. உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை :- கேழ்வரகைக் களைந்து நீரை வடித்து மிக்ஸியில் திரித்து சலித்துக் கொள்ளவும். இதில் வெந்நீர் ஊற்றி லேசாகப் பிடித்துப் பிடித்துக் கிளறி பிடி பதம் வந்ததும் திரும்ப ஈரத்தோடு சலித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இதைத் திரும்ப உதிர்த்து சூட்டோடு வெல்லம், தேங்காய்த்துருவல், உப்பு, ஏலப்பொடி சேர்த்துப் பிசறி கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக