ஃப்ரூட் & நட்ஸ் மோதகம்
தேவையானவை:- பச்சரிசி ரவை – 2 கப், வெல்லத்தூள் – 1 1/2 கப், பேரீச்சை – 2, கிஸ்மிஸ் – 10, டூட்டி ப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 6, பாதாம் – 4., நெய் – ¼ கப், தேங்காய் துருவல் – ஒரு மூடி, ஏலக்காய் – 3.
செய்முறை:- கடாயில் நெய்யை ஊற்றி பச்சரிசி ரவையை வாசம் வரும்வரை வறுத்து 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகப்போடவும். உப்புமா போல உதிர்த்து அதில் ஏலத்தைப் பொடித்துப் போட்டுத் தேங்காய்த் துருவலுடன் கலக்கி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது வெந்நீரில் கரைத்து வடிகட்டி கொதிக்கவைத்து ரவையில் சேர்க்கவும். இறுகியதும் இறக்கி டூட்டி ப்ரூட்டி, பொடியாக நறுக்கிய பேரீச்சை, கிஸ்மிஸ், வறுத்து ஒடித்த பாதாம் முந்திரி, கலந்து. மாவை நன்கு பிசறி நெய் தொட்டு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக