கோதுமைக் கொழுக்கட்டை
தேவையானவை :- கோதுமை மாவு - 2 கப், தேங்காய்த் துருவல் - 1/2 கப், உப்பு - 1 டீஸ்பூன்., சீரகம் - 1 டீஸ்பூன், தண்ணீர் தேவையான அளவு.
செய்முறை:- வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு நன்கு மணலாக ஆகும்வரை வறுக்கவும். அதில் உப்புத் தண்ணீர் தெளித்து தேங்காய்த் துருவலையும் சேர்த்து , சீரகம் போட்டு லேசாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இதைத் தேங்காய்த் துவையலோடு பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக