வரகரிசி உப்புமாக் கொழுக்கட்டை
தேவையானவை :- வரகரசி – 1 கப் , கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும். தண்ணீர் – 3 கப். ( பச்சைமிளகாய் – 1, காரட் – 1 பொடியாக துருவவும், தேங்காய்த் துருவல் – அரை கப் ) உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:- கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு உளுந்து கடலைப்பருப்பு தாளித்து வெங்காயத்தை வதக்கவும். இதில் வரகரிசியையும் போட்டு லேசாக வறுத்து உப்பு சேர்த்துக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றிக் குக்கரில் ஒரு விசில் வைக்கவும். குக்கரில் முக்கால் பதம் வெந்திருக்கும். இறக்கி அதில் பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், காரட் துருவல் கலந்து நன்கு பிசைந்து பிடிகொழுக்கட்டைகளாக ஆவியில் 20 நிமிடம் வேகவைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக