பாசிப்பயறு கொழுக்கட்டை
தேவையானவை:- கொழுக்கட்டை மாவு – 1 கப், உடைத்த பாசிப்பயறு – அரை கப், தேங்காய்த்துருவல் – கால் கப், உப்பு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கொழுந்து கருவேப்பிலை – சிறிது, வரமிளகாய் – 1. நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:- பாசிப்பயறை வேகவிடவும் முக்கால் பதம் வெந்ததும் இறக்கி அதில் கொழுக்கட்டை மாவு, உப்பு, தேங்காய்த்துருவலைப் போடவும். நெய்யில் சீரகம், பொடிதாக உடைத்த வரமிளகாய், கொழுந்து கருவேப்பிலை தாளித்து மாவில் போட்டு நன்கு கலந்து வெந்நீர் தெளித்துப் பிசைந்து பிடி கொழுக்கட்டைகளாக ஆவியில் வேகவைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக