சீரகக் கொழுக்கட்டை
தேவையானவை :- புழுங்கல் அரிசி மாவு / கொழுக்கட்டை மாவு/ இடியாப்ப மாவு - 1 கப், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - 1/3 டீஸ்பூன், வெங்காயம் - பொடியாக அரிந்தது 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்), துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்), வெந்நீர் - தேவையான அளவு.
செய்முறை:- சீரகம், வெங்காயம், தேங்காய், உப்பை மாவில் போடவும். தேவையான தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசையவும்.விரலால் கிள்ளி சீடைக்காய் அளவு எடுத்து தட்டிப் போடவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து கொழுக்கட்டைகளைப் போடவும்.10 நிமிடம் வேக விடவும். 5 நிமிடம் வெந்தபின்பே கரண்டியால் கிளறி விடவும். ( போட்ட உடன் கிண்டினால் மாவு வெந்நீரில் கரைந்து விடும்.) 10 நிமிடம் கழித்து வடித்து எடுத்து சூடாக பருப்புத் துவையலுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக