எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 டிசம்பர், 2012

AUBERGINE PIRATTAL. கத்திரிக்காய் பிரட்டல்


AUBERGINE PIRATTAL:-

NEEDED:-
AUBERGINE -250 GMS
BIG ONION - 1 NO. FINELY CHOPPED
TOMATO- 1 NO FINELY CHOPPED
GARLIC - 6 PODS
CURRY LEAVES - 1ARK
OIL - 1 TBLSPN
MUSTARD - 1TSP
ORID DHALL - 1 TSP
SOMPH - 1/2 TSP
SALT - 1 TSP

TO GRIND:-
REDCHILLIES - 8 NOS
SOMPH - 1TSP
JEERA - 1/2 TSP
PEPPER - 1/4 TSP
COCONUT - 2 INCH PIECE
SMALL ONION - 2 NO
GARLIC - 1NO.

METHOD:-
GRIND ALL THE INGREDIENTS WELL. WASH AND CUT AUBERGINES INTO 8 PIECES. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. THEN ADD SOMPH, CURRY LEAVES, CHOPPED ONION, TOMATO, GARLIC & AUBERGINE. SAUTE FOR 5 MINUTES. ADD THE MASALA & SALT. SAUTE WELL. ADD LITTLE WATER. COOK TILL THE AUBERGINES ARE TENDER. SERVE HOT WITH CURD RICE OR CHAPPATHIS.

கத்திரிக்காய் பிரட்டல்:-
தேவையானவை:-
கத்திரிக்காய் - 250 கி
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும்.
தக்காளி - 1 பொடியாக நறுக்கவும்.
பூண்டு - 6 பல்
கருவேப்பிலை - 1 இணுக்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு -  1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

அரைக்க:-
வரமிளகாய் - 8
சோம்பு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
தேங்காய் - 2 இன்ச் துண்டு
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 1 பல்

செய்முறை:-
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை அரைக்கவும். கத்திரிக்காய்களைக் கழுவி 8 துண்டுகளாக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்தவுடன் உளுந்து போடவும். சிவந்தவுடன் சோம்பு, கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பூண்டு, கத்திரிக்காய் போட்டு 5 நிமிடங்கள் நன்கு வதக்கவும். அதில் உப்பு போட்டு அரைத்த மசாலாவைப் போட்டுத் திறக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து  வேகவிடவும். மசாலா ஒன்று சேர்ந்து கத்திரிக்காய் வெந்ததும்  சூடாக தயிர்சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

3 கருத்துகள்:

  1. சுவையோ சுவை. என் தோழி,கத்திரிக்காய்ப் பிரட்டல் என்று கத்திரிக்காய் அளவுக்குச் சின்ன வெங்ஆயம் பாதிக்கு பூண்டும் போட்டும் வதக்குவாள். அது வேறு சுவை. நீங்கள் சொல்லியிருப்பது எங்க பக்க வழக்கமாய் இருக்கிறது. நன்றி தேன்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...