ஓட்ஸ் வெஜ் கொழுக்கட்டை
தேவையானவை :- அரிசி – 2 கப், ஓட்ஸ் – 1 கப், பொடியாக அரிந்த காரட் பீன்ஸ், பட்டாணி,குடைமிளகாய் – அரை கப், தேங்காய் துருவல் – அரை கப், உப்பு – அரை டீஸ்பூன், பொடியாக அரிந்த வெங்காயம் – 1. தாளிக்க :- எண்ணெய் – 2 டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வரமிளகாய் – 2 விதையை உதிர்த்துவிட்டு துண்டு துண்டாக ஒடித்து வைக்கவும். கருவேப்பிலை – 1 இணுக்கு.
செய்முறை:- அரிசியை ஊறவைக்கவும். ஓட்ஸைப் பொடித்து வைக்கவும். அரிசி இரண்டு மணி நேரம் ஊறியதும் உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். பொடித்த ஓட்ஸை இதில் போட்டுக் கலந்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து வரமிளகாய், உளுந்து, சீரகம், கருவேப்பிலை, தாளிக்கவும். இதில் பொடியாக அரிந்த வெங்காயம் , காய்கறிக் கலவையைப் போட்டு நன்கு வதக்கவும். தளரக் கரைத்த அரிசி ஓட்ஸ் கலவையை ஊற்றி நன்கு கிளறவும். பானில் ஒட்டாத பதம் வரும்போது தேங்காய்த் துருவலைப் போட்டு இறக்கவும். லேசாக ஆறியதும் நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக