ஓலைக் கொழுக்கட்டை
தேவையானவை :- பனை ஓலைக்குருத்து – ஒரு அடி நீளமும் மூன்று அங்குல அகலமும் உள்ளது =10. பச்சரிசிமாவு – 2 கப், வேகவைத்த காராமணி- 1 கைப்பிடி , கருப்பட்டி – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – ஒரு மூடி. உப்பு – 1 சிட்டிகை, ஏலப்பொடி – 1 சிட்டிகை.
செய்முறை:- பனைஓலைக் குருத்துகளை நீரில் நனைத்து வைக்கவும். பச்சரிசி மாவில் உப்பு, ஏலப்பொடி, வேகவைத்த காராமணி , தேங்காய்த்துருவல் போட்டு நன்கு கலக்கவும். கருப்பட்டியைக் கெட்டியாக இளம்பாகு வைத்து மாவில் ஊற்றி நன்கு பிசையவும். ஒரு ஓலையை எடுத்து அதில் நீளவாக்கில் கொழுக்கட்டை மாவை வைத்து இன்னொரு ஓலையால் மூடவும். இதேபோல் மீதி மாவையும் செய்து இட்லிப் பாத்திரத்தில் 20 நிமிடம் வேகவைக்கவும். இந்தக் கொழுக்கட்டை நீளவாக்கில் இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக