கொள்ளு காரக் கொழுக்கட்டை
தேவையானவை :- பச்சரிசி மாவு – 2 கப், கொள்ளு – 1 கப், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், ( வரமிளகாய் – 2, கருவேப்பிலை - 2 ஆர்க், இவற்றை வறுத்து கால்டீஸ்பூன் உப்புடன் கரகரப்பாகப் பொடிக்கவும் ). பொட்டுக்கடலைப்பொடி – அரை டேபிள் ஸ்பூன். நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன், தண்ணீர் – ஒண்ணேகால் கப்.
செய்முறை:- பச்சரிசி மாவை வெந்நீர் ஊற்றி மேல்மாவு தயாரித்து மூடிவைக்கவும். கொள்ளை வறுத்து அளவாகத் தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பாதி கொள்ளைப் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுத்து மிச்ச கொள்ளுடன் சேர்க்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்து கொள்ளைப் போட்டு அதில் பொடித்த பொடியைப் போடவும். ஒரு நிமிடம் கிளறி இறக்கி நீர்க்க இருந்தால் பொட்டுக்கடலைப் பொடி போட்டுப் பிசைந்து நெல்லி அளவு உருண்டைகள் செய்யவும். மேல்மாவில் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்துக் கொள்ளுப் பூரணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக