ட்ரைஃப்ரூட்ஸ் மோமோஸ்
தேவையானவை:- மைதா – 2 கப், ஃபில்லிங் :- பாதாம் -15, பிஸ்தா – 15, முந்திரி – 15, பேரீச்சை – 6, கிஸ்மிஸ் – 30, செர்ரி – 10, டூட்டி ஃப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன், கொப்பரை – 2 டேபிள் ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:- மேல்மாவு செய்ய மைதாவில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு ஒரு சிட்டிகை உப்புப் போட்டுப் பிசையவும். ஃபில்லிங்க் செய்ய பாதாம் முந்திரியை ஊறவைத்து துண்டுகளாக நறுக்கவும். பேரீச்சை பிஸ்தாவையும் நறுக்கவும். செர்ரியை கொட்டை எடுத்து சின்னதாக நறுக்கவும். கொப்பரையை லேசாக வாசம் வரும் பக்குவத்தில் வறுத்து டூட்டி ஃப்ரூட்டி, கிஸ்மிஸ் எல்லாவற்றையும் சேர்த்து தேன் ஊற்றிக் கலந்து பதினாறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால் கிண்ணங்களாகத் தட்டி உள்ளே ஃபில்லிங்கை வைத்து எருக்கலங்கொழுக்கட்டை மாதிரியோ அல்லது சோமாசி மாதிரியோ மடித்து ஓரங்களை நன்கு ஒட்டி ஆவியில் 10 – 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக