புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

EGG KUZAMBU .முட்டைக் குழம்பு.

EGG KUZAMBU முட்டைக் குழம்பு.

EGG KUZAMBU :-


BOILED EGG - 4 NOS,
NEEDED :-
SMALL ONION - 10 NOS.
GARLIC - 8 NOS.
TOMATO - 1  NO.  LARGE,
RED CHILLI POWDER - 1 TBLSPN,
DHANIYA POWDER - 3 TBLSPN,
TUMERIC POWDER - 1 PINCH,
TAMARIND - 1 AMLA SIZE BALL,
SALT - 2 TSP.
OIL -  1 TBLSPN,
MUSTARD - 1 TSP,
ORID DHAL - 1 TSP ,
FENUGREEK - 1 /2 TSP,
CURRY LEAVES - 1 ARK.

METHOD:-

SOAK TAMARIND AND SALT IN 3 CUPS OF WATER. PEEL AND HALVE THE ONION AND GARLIC. CHOP TOMATO. HEAT OIL IN A PAN. ADD MUSTARD, ORID DHAL, FENUGREEK. WHEN MUSTARD SPLUTTERS AND ORID DHAL BECOMES BROWN ADD CURRY LEAVES, SMALL ONION, GARLIC, TOMATO. SAUTE WELL. SQUEEZE THE TAMARIND PULP. ADD CHILLI POWDER, DHANIYA POWDER , TURMERIC POWDER AND MIX WELL AND POUR THIS TO THE CONTENT IN THE TAWA.  BRING TO BOIL . PEEL AND SLIT OPEN THE EGGS ON BOTH SIDES AND ADD IT TO THE BOILING MIXTURE. WHEN OIL SEPERATES AT SIDES REMOVE FROM FIRE AND SERVE HOT WITH PLAIN RICE.

FOR ADDITIONAL GRAVY ADD 1 TBL SPN  COCONUT, BADAM GROUND PASTE.

முட்டைக் குழம்பு :-

தேவையானவை :-
அவித்த முட்டை - 4,
சின்ன வெங்காயம், 10,
பூண்டு - 8,
தக்காளி - 1 பெரிது,
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
தனியாத்தூள் - 3 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
புளி - 1 நெல்லிக்காய் அளவு,
உப்பு - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:-

புளியையும் உப்பையும் 3 கப் தண்ணீரில்  ஊறவைக்கவும். வெங்காயம் பூண்டைத் தோலுரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வெந்தயம் போட்டு கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். புளியைத் தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டி அதில் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடியைச் சேர்க்கவும். இதை கரைத்து வதக்கிய காயின் மேல் ஊற்றவும்.  கொதிக்க விடவும். முட்டையைத் தோலுரித்து இரண்டாக வகிர்ந்து அதில் போடவும். பக்கங்களில் எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

குழம்பு அதிகம் வேண்டுமென்றால்  1 டேபிள் ஸ்பூன் தேங்காய் பாதாம் அரைத்த கலவையை ஊற்றி இறக்கவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...