எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

குட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES

1.ஒயிட் ஃப்ரைட் ரைஸ்:-
தேவையானவை :-
சாதம் (பாசுமதி அல்லது பச்சரிசி) - 1 கப்.
சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால் கிளறி ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு ஆற வைக்கவும்.
பெரிய வெங்காயம் - 1. நீளமாக அரிந்தது.
குடைமிளகாய் - 1 . நீளமாக அரிந்தது.
காரட் - 1 . நீளமாக துருவியது
பீன்ஸ் - 1 . நீளமாக அரிந்தது
முட்டைக்கோஸ் - 50 கி. நீளமாக துருவியது.
எண்ணெய் - 4 டீஸ்பூன்
சீனி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
வெள்ளை மிளகுப் பொடி - 1/4 டீஸ்பூன்

செய்முறை :-
கடாயில் எண்ணெயைக் காயவைக்கவும்..
ஸ்டவில் தீ அதிக அளவில் இருக்க வேண்டும்..
வெங்காயம்.,பீன்ஸ்., குடை மிளகாய்., முட்டைக்கோஸ்., காரட் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
இதில் சீனி., உப்பு., அஜினோமோட்டோ., வெள்ளை மிளகுத்தூள் சேர்க்கவும்.
உதிரியான சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறவும்.
சாஸ் மற்றும் உருளை ஃப்ரென்ச் ஃப்ரையுடன் சூடாகப் பரிமாறவும்.

2. கருவேப்பிலை சாதம். :-
தேவையானவை:-
கருவேப்பிலை – 1 கட்டு
சாதம் – 4 கப்
உளுந்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் – 4
பெருங்காயம் – ½ இன்ச் துண்டு
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்



செய்முறை:-
கருவேப்பிலையை ஆய்ந்து கழுவிக் காயவைக்கவும். வெறும் கடாயில் உளுந்தம் பருப்பைப் பொன்னிறமாக வறுக்கவும். அதில் வரமிளகாய், பெருங்காயம் போட்டு நன்கு வறுக்கவும். பின் கருவேப்பிலையைப் போட்டு சலசலவென ஆகும்வரை வறுக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து இவை அனைத்தையும் பொடிக்கவும்.

ஒரு பேசினில் சாதத்தைப் பரப்பி ஆறவிடவும். எண்ணெயில் கடுகு உளுந்து தாளித்து சாதத்தில் போட்டு பொடியைத் தூவிக் கிளறி, நெய்யையும் உருக்கி ஊற்றிக் கிளறி உருளை பொடிமாஸ்/வாழைக்காய் பொடிமாஸுடன் பரிமாறவும்.


3.முழு நெல்லிக்காய் சாதம்:-
தேவையானவை:-
சாதம் - 2 கப்
முழு நெல்லிக்காய் - 6
பச்சை மிளகாய் - 2
உப்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இ்ணுக்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-
முழு நெல்லிக்காயை கொட்டை நீக்கி துருவி., பச்சை மிளகாய்., உப்புடன் தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் கருவேப்பிலை .,உப்பு போட்டு இறக்கி சாதத்தில் சேர்க்கவும். அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறி தயிர்.,மசால்வடை அப்பளத்துடன் பரிமாறவும்...

4. புதினா புலவ்:-
தேவையானவை :-
பாசுமதி அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
தக்காளி - 1 பொடியாக அரிந்தது
உப்பு – 1 டீஸ்பூன்.

அரைக்க:-
புதினா - 1 கட்டு
கொத்துமல்லி - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
தேங்காய் - 3 இன்ச் துண்டு
இஞ்சி - 1 இன்ச் துண்டு
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 10

தாளிக்க :-
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 1 இன்ச் துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
இலை - 1 இன்ச் துண்டு
அன்னாசிப் பூ - 1

செய்முறை :-
புதினா., கொத்துமல்லியை கழுவி ., சுத்தம் செய்து மற்ற பொருட்களுடன் போட்டு நன்கு அரைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அரிசியை நன்கு களையவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை ., கிராம்பு., ஏலக்காய்., இலை., அன்னாசிப்பூ எல்லாம் தாளிக்கவும். அதில் வெங்காயம்., தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். அரிசியை சேர்க்கவும். உப்பு சேர்த்து அரைத்த தண்ணீரை சேர்க்கவும். நன்கு கிளறி ஒன்று அல்லது இரண்டு விசில் வைத்து குக்கரை இறக்கவும். பத்து நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து சூடாக புதினா புலவை வெள்ளரி காரட் சாலட்., பைன் ஆப்பிள் ரெய்த்தா., உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்..


5.மாங்காய் சாதம்.:-
தேவையானவை:-
சாதம் - 2 கப்
பச்சரிசி மாங்காய் – 1
பச்சை மிளகாய் - 1
உப்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இ்ணுக்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-
மாங்காயைத் தோல் சீவித்துருவி., பச்சை மிளகாய்., உப்புடன் தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் கருவேப்பிலை .,உப்பு போட்டு இறக்கி சாதத்தில் சேர்க்கவும். அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறி அரிசி அப்பளம், இனிப்புப் பச்சடியுடன் பரிமாறவும்


6.குடைமிளகாய் சாதம் :-

தேவையானவை:-
சாதம் - 2 கப்
குடைமிளகாய் - 4 (மீடியம்) மெல்லிய குச்சியாக நறுக்கவும்.
பெரிய வெங்காயம் - 3 குச்சியாக நறுக்கவும்.
உளுந்து - 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் ( அல்லது நெய்)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்.



செய்முறை:-

பானில் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். பின் குடைமிளகாய் போடவும். ஒரு தனி பானில் மிளகாய்., உளுந்து., கடலைப்பருப்பை வறுத்து ஆறவைத்து பொடி செய்யவும். வதக்கிய வெங்காயம் ., குடைமிளகாயில் சாதம்., உப்பு., பொடி சேர்த்து நன்கு கிளறி அப்பளம்., சாலட்., ரெய்த்தாக்களுடன் பரிமாறவும்.

7. மஷ்ரூம் பிரியாணி:-

தேவையானவை:-
பட்டன் மஷ்ரூம் – 1 பாக்கெட்.
பாசுமதி ரைஸ் – 2 கப்
பெரிய வெங்காயம் - 2 பொடியாக அரிந்தது.
தக்காளி - 2 பொடியாக அரிந்தது

அரைக்க:-
பச்சை மிளகாய் – 3
தேங்காய் - 3 இன்ச் துண்டு
இஞ்சி - 1 இன்ச் துண்டு
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு – 10
புதினா – 1 கைப்பிடி
கொத்துமல்லி - 1 கைப்பிடி

மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
மல்லித்தூள் – ½ டீஸ்பூன்
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்


தாளிக்க :-
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 1 இன்ச் துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
இலை - 1 இன்ச் துண்டு
அன்னாசிப் பூ - 1

செய்முறை :-
மஷ்ரூமை சுத்தம் செய்து இரண்டாக வெட்டி கொதிக்கும் வெந்நீரில் 3 நிமிடம்போட்டு அலசவும்.அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு அரைத்து அதில் மிளகாய்ப்பொடி மல்லிப்பொடி தயிரைச் சேர்க்கவும்.
 அரிசியை நன்கு களைந்து நீரை வடித்து ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து வைக்கவும்.
 ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை ., கிராம்பு., ஏலக்காய்., இலை., அன்னாசிப்பூ எல்லாம் தாளிக்கவும். அதில் வெங்காயம்., தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.காளானையும் அரிசியை சேர்க்கவும். உப்பு சேர்த்து அரைத்தமசாலாவைத் தயிருடன் சேர்க்கவும்.. நன்கு கிளறி ஒன்று அல்லது இரண்டு விசில் வைத்து குக்கரை இறக்கவும்.  மஷ்ரூம் பிரியாணியை வெங்காயத் தயிர்ப்பச்சடி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.


8. பீட்ரூட் சாதம்:-

தேவையானவை :-

அரிசி - 1 கப் ( சமைத்தது)
 பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் ( வேகவைத்தது)
 பீட்ரூட் - 150 கி துருவியது
 பெரிய வெங்காயம் - 1 துருவியது
 தக்காளி - 1 துருவியது.
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 சிவப்பு மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 பிரிஞ்சி இலை - 1 இன்ச்
 பட்டை - 1 இஞ்ச்
 கிராம்பு - 2
 ஏலக்காய்- 1
 சோம்பு - 1/2 டீஸ்பூன்
 உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:-
 ஒரு பானில் எண்ணெயைச் சூடாக்கி சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போடவும். இவை பொரிந்ததும், வெங்காயத்தை வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்க்கவும். அது சிவப்பாக வரும்போது தக்காளி, வரமிளகாய்த்தூள், உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கிண்டவும். சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேகவைத்து அடுப்பில் இருந்து இறக்கவும். சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறவும். சூடாக காலிஃப்ளவர்  சாப்ஸுடன் பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...