தேங்காய் பர்பி
தேவையானவை:- தேங்காய் – 1, ஜீனி – 1 கப், நெய் -1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன், முந்திரி – 10, ஏலப்பொடி – கால்டீஸ்பூன்.
செய்முறை:-. தேங்காயைத் தூளாகத் துருவி வைக்கவும். ஒரு ட்ரேயில் ஒரு டீஸ்பூன் நெய்யைத் தடவி வைக்கவும். அடி கனமான பானில் தேங்காய்த்துருவலைப் போட்டு மிதமான தீயில் நன்கு வதக்கவும். பச்சை வாசம் போனவுடன் ஜீனியைச் சேர்த்துத் தொடர்ந்து கிளறவும். ஒரு சின்ன பானில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் முந்திரியை வதக்கி சேர்க்கவும். நன்கு கிளறி பக்கங்களில் ஒட்டாமல் இறுகி வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டித் துண்டுகள் போடவும்.