மேக்கரோனி பாயாசம்
தேவையானவை :- மேக்கரோனி - 1 கப், பால் - 2 லிட்டர், மில்க் மெய்ட் - 1 டேபிள் ஸ்பூன், சீனி - 1/2 கப், குங்குமப்பூ - 1 சிட்டிகை, ஏலப்பொடி - 1 சிட்டிகை, முந்திரி – 10, நெய் - 10 கி
செய்முறை :- மேக்ரோனியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊறப்போடவும். பாலைக் காய்ச்சிக் கொதி வரும்போது மேக் ரோனியைச் சேர்த்து மென்மையாக வெந்ததும் சீனியைச் சேர்க்கவும். சீனி கரைத்து கொதித்ததும் இறக்கி மில்க் மெயிட் , ஏலப்பொடி , குங்குமப்பூ, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துப் பரிமாறவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக