பரங்கிக்காய் பாயாசம்
தேவையானவை :- நன்கு கனிந்து சிவந்த பரங்கிக்காய் – 1 துண்டு, பால் – 4 கப், சர்க்கரை – முக்கால் கப், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:- முந்திரி கிஸ்மிஸை நெய்யில் வறுக்கவும். அதே நெய்யில் பரங்கிக்காயைத் துருவிப் போட்டு வறுக்கவும். ஒரு கப் பால் ஊற்றிக் குக்கரில் வேகவைத்து நன்கு மசிக்கவும். மிச்சப் பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் ஏலப்பொடி தூவி முந்திரி கிஸ்மிஸை சேர்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக