நுங்குப் பாயாசம்
தேவையானவை :- இளநுங்கு – 5, பால் – அரை லிட்டர், சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன். அரிசி மாவு – 1 டீஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை.
செய்முறை:- பாலைக்காய்ச்சி அதில் சிறிது எடுத்து அரிசி மாவு சேர்த்துக் கரைத்துத் திரும்பப் பாலில் ஊற்றிக் கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கரைந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும். நன்கு ஆறியதும் ஏலப்பொடி போடவும். இளநுங்கை நீருடன் கையால் மசித்தோ அல்லது மிக்ஸியில் விப்பர் செய்தோ பாலுடன் நன்கு கலக்கி உபயோகப்படுத்தவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக