கேழ்வரகுப் பாயாசம்
தேவையானவை :- கேழ்வரகு – அரை கப், பால் – ரெண்டு கப், சர்க்கரை – கால் கப், நெய் – ரெண்டு டீஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை, முந்திரி கிஸ்மிஸ் – தலா 6.
செய்முறை:- கேழ்வரகைக் களைந்து காயவைத்து மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இந்த மாவில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் குக்கரில் ஒரு விசில் வைக்கவும். இறக்கி அதில் பாலைச் சேர்த்துக் கரைத்து நன்கு கொதிக்க விடவும். கொதித்துக் கண்ணாடிபோல் ஒட்டாமல் இருக்கும்போது சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொடித்துப் போட்டு ஏலப்பொடி தூவி இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக