மிக்ஸட் தால் பாயாசம்
தேவையானவை :- பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி, கடலைப் பருப்பு – ஒரு கைப்பிடி, பச்சரிசி – ஒரு கைப்பிடி, மூன்றையும் வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்துக் கொரகொரப்பாகப் பொடிக்கவும். வெல்லம் – 2 அச்சு, நெய்- 2 டீஸ்பூன், தேங்காய் – கால் கப் ,கொரகொரப்பாக அரைக்கவும், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலக்காய் – 2 பொடிக்கவும்.
செய்முறை :- பச்சரிசி, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மாவை எடுத்து அளந்து 6 பங்கு தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க விடவும் . வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு வெந்நீரில் கரைத்து வடிகட்டிச் சேர்க்கவும். வெல்லமும் சேர்ந்து கொதித்ததும் அரைத்த தேங்காய் போட்டுக் கொதிக்க விடாமல் இறக்கவும். இதில் நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் போட்டு ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக