மீல்மேக்கர் குழம்பு
தேவையானவை:- மீல் மேக்கர் – ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், அரைக்க:- தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன், சோம்பு, கசகசா – தலா அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம், பூண்டு – தலா 2, கடுகு - 1 டீஸ்பூன், சோம்பு - 1/2 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, கொத்துமல்லி – பொடியாக அரிந்தது ஒரு கைப்பிடி.
செய்முறை:- மீல்மேக்கரில் வெந்நீர் ஊற்றி நன்கு பிழிந்து இரண்டாக வெட்டி வைக்கவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். புளியை இரண்டு கப் நீரில் கரைத்து உப்பு, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் போட்டு வைக்கவும். தேங்காய் சோம்பு கசகசா பூண்டு வெங்காயத்தை அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு சோம்பு தாளித்துப் பெரிய வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, மீல்மேக்கர் போட்டு வதக்கவும். இதில் புளிக்கரைத்த தண்ணீரை மசாலாப் பொடிகளோடு போட்டுக் கொதிக்க விடவும். தேங்காய் மசாலாவைச் சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டுக் கொத்துமல்லி தூவி இறக்கவும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக