ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப்
தேவையானவை :- வெங்காயத்தாள் – 1 கட்டு, உருளைக்கிழங்கு சின்னம் – 1, பூண்டு – 2 பல், ஆரிகானோ – கால் டீஸ்பூன், சோயா சாஸ் – கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், தண்ணீர் – 4 கப், கொத்துமல்லித்தழை – சிறிது. க்ரீம் – சிறிது விரும்பினால்.
செய்முறை:- வெங்காயத்தாளைச் சுத்தம் செய்து அலசி பொடிப் பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கையும் தோல்சீவிப் பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயத்தாள், உருளையைப்போட்டு வதக்கி 4 கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து அதைத் திரும்ப பானில் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் சோயா சாஸ், உப்பு, ஓரிகானோ, கொத்துமல்லித்தழை, உப்பு போட்டு இறக்கி மிளகுத்தூள் , க்ரீம் சேர்த்து சூப் ஸ்டிக்குகளுடன் & வெண்ணெயில் வறுத்த ரொட்டித் துண்டுகளுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக